Published : 26 Jun 2022 04:20 AM
Last Updated : 26 Jun 2022 04:20 AM

கோயில்களில் கணினி வழியாக ரூ.200 கோடி வாடகை வசூல்: அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை

கோயில்களில் கணினி வழியாக ரூ.200 கோடி வாடகை வசூல் செய்யப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

கோயில்களின் வாடகைதாரர்கள் வாடகை தொகையை கணினி வழியாக செலுத்தும் வசதி கடந்த ஆண்டு அக்டோபர் 8-ம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது. அறநிலையத் துறை நடவடிக்கையால் இதுவரை ரூ.200 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது.

இணை ஆணையர் சென்னை 1-ல் ரூ.30.1 கோடி, இணை ஆணையர் சென்னை 2-ல் ரூ.23.91 கோடி,திருச்சி ரூ.16.31 கோடி, காஞ்சிபுரம் ரூ.13.55 கோடி, நாகப்பட்டினம் ரூ.13.23 கோடி, மயிலாடுதுறை ரூ.12.33 கோடி, தூத்துக்குடி ரூ.10.17கோடி, மதுரை ரூ.10.1 கோடி, திண்டுக்கல் ரூ.9.71 கோடி, திருநெல்வேலி ரூ.8.28 கோடி எனதமிழகம் முழுவதும் மண்டல வாரியாக வசூல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் ரூ.6.29 கோடி, பழநி, தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் ரூ.4.42 கோடி, திருச்சி, மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயிலில் ரூ.4.33 கோடி, மதுரை, மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் ரூ.3.05 கோடி, சென்னை, பூங்காநகர் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் ரூ.2.99 கோடி, திருச்சி பஞ்சவர்ண சுவாமி கோயிலில் ரூ.2.47 கோடி, சென்னை பாடி திருவல்லீஸ்வரர் கோயிலில் ரூ.2.42 கோடி, சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலில் ரூ.2.32 கோடி, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ரூ.2.04 கோடி, திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி கோயிலில் ரூ.1.75 கோடி ஆகிய 10 கோயில்கள் அதிக வசூல் செய்துள்ளன.

வாடகை, குத்தகை, நிலுவைத்தொகை வசூல் மூலம் கோயில்திருப்பணிகள், பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தமிகவும் பயனுள்ளதாக அமையும்.எனவே, கோயில் இடத்தில் குடியிருப்பவர்கள், குத்தகைதாரர்கள் முறையான வாடகை தொகையையும், நிலுவை தொகையையும் செலுத்தி கோயில் வளர்ச்சிக்கு உதவுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு செய்திக்குறிப்பில் அமைச்சர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x