Published : 07 May 2016 10:32 AM
Last Updated : 07 May 2016 10:32 AM

அரசு பஸ்களின் சாலை விபத்துகளைக் குறைக்க ஓட்டுநர், நடத்துநருக்கு மாதந்தோறும் பயிற்சிகள்: போக்குவரத்து துறை உத்தரவு

அரசு பஸ்களின் சாலை விபத்துக் களை குறைக்க 8 அரசு போக்கு வரத்து கழகங்களின் நிர்வாக இயக்குநர்களும் மாதந்தோறும் ஓட்டுநர், நடத்துநர்களுக்கு நேரடி யாக பயிற்சி அளிக்க வேண் டும். இதேபோல், கிளை மேலாளர் கள் 15 நாட்களுக்கு ஒரு முறை சாலை விபத்துகளை எவ்வாறு தடுக்கலாம் என்பது குறித்து விளக்க வேண்டுமென போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் சாலை விபத்துகள் அதிகம் நடக்கும் பட்டியலில் தமிழ கம் முதலிடத்தில் இருக்கிறது. சாலைகள் விரிவாக்கம், மேம்பாலங் கள் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டு பணிகள் மேற்கொள் ளப்பட்டு வந்தாலும், சாலை விபத்து களின் எண்ணிக்கை குறைய வில்லை. இந்தியாவில் ஒவ்வொரு மணி நேரத்திலும் சுமார் 16 பேர் சாலை விபத்துகளால் இறக்கின் றனர். சுமார் 50 சதவீத விபத்து களுக்கு ஓட்டுநர்களின் கவனக் குறைவே காரணம் என தெரிவிக் கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டில் மொத்தம் 69 ஆயிரத்து 59 விபத்துகள் நடந்துள்ளன. இதில் 15 ஆயிரத்து 642 பேர் இறந்துள் ளனர். இது இதற்கு முந்தைய ஆண்டை (2014) விட, இறப்பு எண்ணிக்கை 452 பேர் அதிகம். குறிப்பாக, மக்கள் அதிகளவில் பயணம் செய்யும் அரசு பஸ்களில் அடிக்கடி சாலை விபத்துகள் ஏற்படுவது பயணிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இதற்கிடையே, அரசு பஸ்களின் சாலை விபத்துகளை குறைக்க போக்குவரத்து துறை புதிய உத்தரவுகளை அரசு போக்குவரத்து கழகங்களுக்கு பிறப்பித்துள்ளது.

இது தொடர்பாக அரசு போக்கு வரத்து கழகங்களின் மூத்த அதிகாரி கள் ‘தி இந்து’ விடம் கூறியதாவது:

அரசு பஸ்களின் சாலை விபத்து களை குறைக்க போக்குவரத்து துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, சென்னை மாநகர போக்குவரத்து கழகம், விரைவு போக்குவரத்து கழகம், விழுப்புரம், கும்பகோணம், சேலம், கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி ஆகிய எட்டு போக்கு வரத்து கழகங்களின் நிர்வாக இயக்குநர்களும் அந்தந்த போக்கு வரத்து கழகங்களுக்குள் மாதந் தோறும் ஒருமுறை ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்கு விபத்து தடுப்பது தொடர்பாக நேரடியாக பயிற்சி அளிக்க வேண்டும்.

இதேபோல், போக்குவரத்து கழகங்களில் பணியாற்றும் கிளை மேலாளர்கள் 15 நாட்களுக்கு ஒரு முறை சாலை விபத்துகளை தடுப்பது தொடர்பாக பயிற்சி அளிக்க வேண்டும். மேலும், சமீபத்தில் நடக்கும் சாலை விபத்துகளை உதாரணம் காட்டி, விபத்து குறித்து முழுமையாக ஆய்வு செய்து எவ்வாறு செயல்பட்டு இருந்தால் அந்த விபத்தை தடுத்திருக்கலாம் என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டுமென போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் அரசு பஸ்களின் சாலை விபத்துகளை குறைக்க முடியும் என எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x