Published : 22 Jun 2022 07:18 PM
Last Updated : 22 Jun 2022 07:18 PM
சென்னை: கடந்த 3 நாட்களாக சென்னையில் விட்டு விட்டு பெய்யும் கனமழை காரணமாக சென்னையில் 19 இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளன; 37 மரங்கள் விழுந்துள்ளன.
சென்னையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. மாலை நேரங்களில் கனமழை பெய்கிறது.
இந்நிலையில், இந்த மழை காரணமாக சென்னையில் 19 இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளன. 37 மரங்கள் விழுந்துள்ளன. மாதவரம் மண்டலத்தில் 24 வது வார்டில் சூரப்பேட்டை, 26 வது வார்டில் ஜிஎன்டி சாலை, 30 வார்டில் 200 அடி சாலை, கணபதி சிவா நகர், 33 வார்டில் பஜனை கோவில் தெரு, தண்டையாட் பேட்டை மண்டலம் 36 வது வார்டில் சர்மா நகர் முதல் மெயின் சாலை, ராயுபுரம் மண்டத்தில் கே.5 காவல் நிலையம் உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது.
மேலும், திரு.வி.நகர் மண்டலம் 69 வார்டில் கொளத்தூர் வண்ணான்குட்டை, 73 வார்டு நச்சாரம்மாள் தெரு,பிரகாஷ் ராவ் காலனி, திருவேங்கடம் சாமி தெரு, புளியந்தோப்பு நெடுஞ்சாலை, அம்பத்தூர் மண்டலத்தில் 89 வார்டில் கிருஷ்ணா நகர், அண்ணா நகர் மண்டலத்தில் 105 வார்டில் இந்திரா காந்தி நகர், 94 வார்டில் சிட்கோ நகர், ஆலந்தூர மண்டத்தில் 163 வார்டில் சிட்டி இணைப்பு சாலை, அடையாறு மண்டலத்தில், 170 வார்டில் கலை மகள் சாலை, சோழிங்கநல்லூர் மண்டலத்தில் 193 வார்டு கஸ்தூரி பாய் நகர், செம்ஞ்சேரி 4 வது கிராஸ் சாலை ஆகிய 19 இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளன.
இதில் பல இடங்களில் தொடர்ந்து தண்ணீரை அகற்றும் பணி நடைபெற்ற வருகிறது. இதைத் தவிர்த்து 37 இடங்களில் மரங்கள் விழுந்துள்ளன. இவை அனைத்து உடனடியாக அற்றப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT