Published : 21 Jun 2022 06:58 PM
Last Updated : 21 Jun 2022 06:58 PM
சென்னை: விட்டு விட்டு பெய்யும் கனமழை காரணமாக சென்னையில் 5 இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளன. 10 மரங்கள் விழுந்துள்ளன.
சென்னையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. மாலை நேரங்களில் 2 முதல் 3 மணி நேரம் தொடர் மழை பெய்கிறது.
ஜூன் மாதத்தில் சென்னை மாவட்டத்தில் இயல்பாக 56 மி.மீ. மழை பெய்யும். ஆனால், கடந்த 19ம் தேதி மட்டும் ஒரே நாளில் சென்னையில் 82.1 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இது கடந்த 6 ஆண்டுகளில் ஜூன் மாதத்தில் பதிவான மழையைவிட மிக மிக அதிகம் ஆகும்.
இந்நிலையில், இந்த மழை காரணமாக சென்னையில் 5 இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளன. 10 மரங்கள் விழுந்துள்ளன. மாதவரம் மண்டலத்தில் 24 வது வார்டில் சூரப்பேட்டை, 26 வது வார்டில் ஜிஎன்டி சாலை, திரு.வி.நகர் மண்டலம் 66வது வார்டில் ராம் நகர், அண்ணா நகர் மண்டலத்தில் 95 வார்டில் திருமங்கலம் சாலை, அடையாறு மண்டலத்தில் 170 வார்டில் கலை மகள் சாலை ஆகிய 5 இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளன. இதில் இன்று மாலை (21ம் தேதி ) 4 மணி வரை 1 இடத்தில் தண்ணீர் அகற்றப்பட்டுள்ளன. 4 இடங்களில் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதைத் தவிர்த்து 10 இடங்களில் மரங்கள் விழுந்துள்ளன. இதன்படி 105 வார்டு எம்எம்டிஏ காலணி, 106 வது வார்டு 16 வது மெயின் சாலை, 111 வது வார்டு பைகிராப்ட்ஸ் கார்டன் சாலை, 117 வார்டு வெங்கடநாரயானா சாலை, சின்மையா நகர், 126 வார்டு ஸ்ரீங்கரி மடச் சாலை, 135 வார்டு அசோக் நகர் 1வது அவின்யூ சாலை, 175 இந்திரா நகர் 4 வது மெயின் சாலை, 172 வார்டில் பூங்கா, 181 வார்டு சுப்பிரமணியன் காலனி ஆகிய 10 இடங்களில் மரங்கள் விழுந்துள்ளன. இவை அனைத்தும் உடனடியாக அகற்றப்பட்டுள்ளன
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT