Published : 27 May 2016 10:13 AM
Last Updated : 27 May 2016 10:13 AM
தேமுதிகவை பலப்படுத்தும் வகையில் கட்சி நிர்வாகத்தில் புதிய மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. முதல்கட்டமாக 2 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என்ற வகையில் புதிதாக 60 மாவட்டச் செயலாளர்களை நியமிக்க விஜயகாந்த் முடிவு செய்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியுடன் இணைந்து 104 தொகுதிகளில் போட்டியிட்ட தேமுதிக, படுதோல் வியை சந்தித்தது. கட்சித் தலைவர் விஜயகாந்த்கூட வெற்றி பெற வில்லை. இதனால், தேமுதிகவினர் சோர்வடைந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த 3 நாட் களாக கோயம்பேட்டில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர் களுடன் விஜயகாந்த் ஆலோசனை நடத்தினார். இறுதிநாளான நேற்று தேர்தலில் போட்டியிட்ட 104 வேட்பாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். தோல்விக்கான காரணங்கள், கூட்டணி கட்சிகளால் ஏற்பட்ட சாதகங்கள், பாதகங்கள் குறித்து வேட்பாளர்கள் விளக்கினர்.
இதற்கிடையே, ஓரிரு நாளில் சிங்கப்பூர் அல்லது மலேசியாவுக்கு செல்ல விஜயகாந்த் திட்டமிட்டிருப் பதாக கூறப்படுகிறது. அங்கு ஒரு வாரம் ஓய்வு எடுத்துவிட்டு சென்னை திரும்பியதும் கட்சியில் பல்வேறு மாற்றங்களை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.
60 மாவட்ட செயலாளர்கள்
ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட தேமுதிக நிர்வாகி கள் சிலர் கூறியதாவது:
சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்ட தால் சந்தித்த பிரச்சினைகளை எடுத் துக் கூறினோம். சில தொகுதிகளில் கட்சியின் அடிமட்ட தொண்டர்களே கூட்டணிக்கு வாக்களிக்கவில்லை. தனித்துப் போட்டியிட்டிருந்தால் கட்சித் தொண்டர்கள், நடுநிலை யாளர்களின் ஓட்டுகளை பெற் றிருக்க முடியும். கட்சியின் வாக்கு வங்கியும் அதிகரித்து இருக்கும்.
கட்சியை பலப்படுத்த பல நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக தற்போ துள்ள நிர்வாகத்தை மாற்றி அமைக்க வேண்டும். மாவட்டச் செயலாளர்களின் எண்ணிக்கையை 60-ல் இருந்து 120 ஆக அதிகரிக்க வேண்டும். அப்போதுதான் கட்சி யின் அடித்தளம் பலமாக இருக்கும் என எடுத்துரைத்தோம்.
எங்களின் கோரிக்கைகளை ஏற்றுக் கொண்ட விஜயகாந்த், வெளி நாடு பயணம் முடிந்து திரும்பியதும் கட்சியில் பல்வேறு மாற்றங்களை செய்வதாக உறுதி அளித்துள்ளார். 2 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளரை கட் டாயமாக நியமிப்பேன் என்றார். ஒவ் வொரு சட்டப்பேரவை தொகுதி யிலும் தலா 5 ஆயிரம் புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். அவர்களுக்கு கட்சியின் சார்பில் ஸ்மார்ட் கார்டு உறுப்பினர் அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் விஜயகாந்த் உறுதி அளித் துள்ளார். இது எங்களை ஊக்கப் படுத்தும் வகையில் இருக்கிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT