Published : 21 Jun 2022 03:05 PM
Last Updated : 21 Jun 2022 03:05 PM
புதுச்சேரி: “யோகாவை நாம் அனைவரும் வாழ்க்கையின் ஒரு பகுதியாக கடைபிடிக்க வேண்டும்” என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.
சர்வதேச யோகா தினத்தையொட்டி, புதுச்சேரி காந்தி திடலில் நடைபெற்ற பெருந்திரள் யோகா பயிற்சியைத் தொடங்கி வைத்து மத்திய தகவல் ஒலிபரப்பு இணையமைச்சர் எல்.முருகன் பேசியது: ”வாழ்க்கை முறை மாற்றத்தால் இப்போது அதிகரித்து வரும் ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற நோய்களை யோகா மூலம் கட்டுப்படுத்த முடியும்.
இன்றைய இயந்திரகதியிலான வாழ்க்கையில் யோகா நமது மனதை ஒருமுகப்படுத்துகிறது. யோகா உடற்பயிற்சியாகவும் மருந்தாகவும் மன அமைதி தருவதாகவும் உள்ளது.
இத்தகைய பலன்கள் பலவற்றைத் தருகின்ற யோகாவை நாம் அனைவரும் வாழ்க்கையின் ஒரு பகுதியாக கடைபிடிக்க வேண்டும்.
பிரதமர் நரேந்திர மோடியின் மிகப் பெரும் முயற்சிகளின் காரணமாக ஐக்கிய நாடுகள் சபை ஜூன் 21-ஆம் தேதியை சர்வதேச யோகா தினமாக அறிவித்ததையும் நமது நாட்டில் தோன்றிய அற்புதக் கலையை உலகமே கொண்டாடுகிறது" என்று தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி துணைநிலை ஆளுநரும், தெலங்கானா ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் மத்திய, மாநில அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT