Published : 13 May 2016 04:13 PM
Last Updated : 13 May 2016 04:13 PM
மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி வெற்றிச் சின்னமாக இரட்டை விரலை காட்டும்போது அதை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜன் தடுத்து நிறுத்தினார்.
சென்னை விருகம்பாக்கத்தில் போட்டியிடும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனை ஆதரித்து மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி இன்று பிரச்சாரத்தில் பேசினார்.
அப்போது ஸ்மிருதி இரானி, தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோருக்கு தாமரை மொட்டுகளால் கோக்கப்பட்ட மாலை அணிவிக்கப்பட்டது. அப்போது ஸ்மிருதி இரானி வெற்றியைக் குறிக்கும் வகையில், இரட்டை விரலைக் காட்டினார்.
வட இந்தியாவில் இரண்டு விரல்களை அசைத்துக் காட்டினால் அது வெற்றியின் சின்னம். அதுவே, தமிழகத்தில் இரண்டு விரல்கள் இரட்டை இலையே சுட்டிக்காட்டும். இது தேசிய அரசியலில் ஸ்மிருதி இரானிக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்பதால் அருகில் இருந்த தமிழிசை சவுந்தராராஜன் ஸ்மிருதியை உரிமையோடு தடுத்து நிறுத்தினார்.
அதற்குப் பிறகு ஸ்மிருதி இரானியின் இரு விரல்களை மடக்கிய தமிழிசை, முழுவதுமாக கையசைக்கச் செய்தார். இதனால் அப்பகுதியில் சின்ன சலசலப்பு ஏற்பட்டது.
இது தொடர்பான படங்கள்:
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT