Published : 20 Jun 2022 06:10 PM
Last Updated : 20 Jun 2022 06:10 PM

சென்னை மாநகராட்சி பள்ளிகள் பிளஸ் 2-வில் 86.53% தேர்ச்சி; 10-ம் வகுப்பில் 75.84% தேர்ச்சி 

சென்னை: சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 12ம் வகுப்பில் 86.53 சதவீதமும், 10-ம் வகுப்பில் வகுப்பில் 75.84 சதவீத தேர்ச்சியும் பெற்றுள்ளன.

சென்னை மாநகராட்சி கல்வித் துறையின்கீழ் 32 மேல்நிலைப் பள்ளிகளும், 38 உயர்நிலைப் பள்ளிகளும் செயல்பட்டு வருகிறது. இதில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வை 2478 மாணவர்கள், 3164 மாணவியர்கள் என மொத்தம் 5642 பேர் எழுதினார்கள். இதில் 1,975 மாணவர்கள், 2,907 மாணவியர்கள் என மொத்தம் 4882 பேர் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 86.53 ஆகும்.

கணிதவியல் பாடத்தில் 1, வேதியியல் பாடத்தில் 1, வணிகக் கணிதம் பாடத்தில் 1, பொருளியல் பாடத்தில் 6, வணிகவியல் பாடத்தில் 16, கணக்கு பதிவியல் பாடத்தில் 17, கணினி அறிவியல் பாடத்தில் 4 மற்றும் கணினி பயன்பாடுகள் பாடத்தில் 5 என மொத்தம் 51 பேர் முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

47 பேர் 551க்கு மேல் மதிப்பெண்களும், 164 பேர் 501லிருந்து 550 வரை மதிப்பெண்களும், 382 பேர் 451லிருந்து 500 வரை மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதத்தில் புலியூர் சென்னை மேல்நிலைப்பள்ளி 98.61 சதவீதத்துடன் முதலிடத்தையும், சைதாப்பேட்டை சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி 98.28 சதவீதத்துடன் இரண்டாம் இடத்தையும், புல்லா அவென்யூ சென்னை மேல்நிலைப்பள்ளி 97.63 சதவீதத்துடன் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளன.

10ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வை 3368 மாணவர்கள், 3080 மாணவியர்கள் என மொத்தம் 6448 பேர் எழுதினார்கள். இதில் 2262 மாணவர்கள், 2628 மாணவியர்கள் என மொத்தம் 4890 பேர் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 75.84 ஆகும். சமூக அறிவியல் பாடத்தில் 2 பேர் முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 24 பேர் 451க்கு மேல் மதிப்பெண்களும், 148 பேர் 401லிருந்து 450 வரை மதிப்பெண்களும், 359 பேர் 351லிருந்து 400 வரை மதிப்பெண்களும் பெற்றுள்ளனர்.

தேர்ச்சி விகிதத்தில் சூளைமேடு சென்னை உயர்நிலைப்பள்ளி 100 சதவீதத்துடன் முதலிடத்தையும், வண்ணாரப்பேட்டை சென்னை உருது உயர்நிலைப்பள்ளி 97.67 சதவீதத்துடன் இரண்டாம் இடத்தையும், புல்லா அவென்யூ சென்னை உயர்நிலைப்பள்ளி 97.56 சதவீதத்துடன் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளன. 13 சென்னை மாநகராட்சி பள்ளிகள் 90 சதவீதத்திற்கும் மேல் தேர்ச்சி பெற்றுள்ளன.

இதில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற சூளைமேடு சென்னை உயர்நிலைப்பள்ளிக்கு சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ரூ. 1 லட்சம் ஊக்கத் தொகை வழங்கினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x