Published : 11 May 2016 09:42 AM
Last Updated : 11 May 2016 09:42 AM
திருச்செந்தூர் தொகுதி திமுக வேட்பாளர் அனிதா ராதா கிருஷ்ணனை ஆதரித்து திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி என்.சிவா உடன்குடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார். முன்னதாக `தி இந்து’ வுக்கு அவர் அளித்த சிறப்பு பேட்டி:
தமிழக தேர்தல் நிலவரம் எப்படி இருக்கிறது?
அதிமுக ஆட்சியில் குறிப் பிடத்தகுந்த எந்த பணிகளும் நடைபெறவில்லை. அணுக முடியாதவராக முதல்வர் இருக் கிறார். எனவே, இந்த ஆட்சி மாற வேண்டும் என்பதில் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்.
மற்ற கூட்டணியினர் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் அல்ல, அரசியல் மாற்றம் வர வேண்டும் என்கிறார்களே?
மக்கள் நலக்கூட்டணியில் கொள்கைகள், செயல்பாடுகளி லேயே முரண்பாடு இருக்கிறது. அன்புமணிக்கே நம்பிக்கை இல்லாததால் தான் எம்பி பதவியை ராஜினமா செய்ய வில்லை. இவர்களால் எப்படி மாற் றத்தை தர முடியும். கருணா நிதியால்தான் மாற்றத்தை தர முடியும் என மக்கள் நம்பு கிறார்கள்.
திராவிட கட்சிகள் தமிழகத்தை பாழ் படுத்திவிட்டதாக பாஜக தலைவர்கள் கூறுகிறார்களே?
திராவிட இயக்கங்கள் வந்த பிறகுதான் தமிழகத்தில் சமூக மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் மறைந்துள்ளன. சமுதாய சீர்கேடுகள் நீங்கியிருக்கின்றன.
அதிமுக தேர்தல் அறிக்கை திமுகவுக்கு தேர்தலில் சவாலை ஏற்படுத்துமா?
நிச்சயமாக இல்லை. இத்தனை காலமும் எதையும் சரியாக செய்யாமல் இருந்து விட்டு, இப்போது செய்வோம் என கூறுவதை மக்கள் நம்பத் தயாராக இல்லை. அதிமுக அரசு கடந்த 5 ஆண்டுகளை வீண டித்துள்ளது.
வாக்காளர்களுக்கு கொடுக்க திமுகவும் பணம் பதுக்கி வைத்திருப்பதாக சில கட்சிகள் குற்றம் சாட்டுகின்றனவே?
இது மேலோட்டமான குற்றச் சாட்டு. இதுவரை திமுகவினரிடம் இருந்து பணம் பறிமுதல் செய் யப்படவில்லை.
இந்த தேர்தலில் பலமுனை போட்டி நிலவுகிறதே?
பல முனை போட்டி என்பதால் அரசுக்கு எதிரான வாக்குகள் பிரிவதற்கு வாய்ப்பு இல்லை. யார் ஆட்சிக்கு வரவேண்டும் என மக்கள் தெளிவாக இருப்பதால் தங்கள் வாக்குகளை வீணாக்க விரும்பவில்லை. எனவே, திமுக ஆட்சி அமைப்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT