Published : 04 May 2016 10:20 AM
Last Updated : 04 May 2016 10:20 AM
சென்னை மாவட்டத்தில் முதல்கட்ட தேர்தல் பயிற்சியில் பங்கேற்காத 2 ஆயிரத்து 707 ஊழியர்களுக்கு, மாவட்ட தேர்தல் நிர்வாகம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சென்னை மாவட்டத்தில் 16 தொகுதிகள் உள்ளன. அவற்றில் 3 ஆயிரத்து 769 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. அதில் மாற்றுத் திறனாளிகளுக்கான இரு வாக்குச் சாவடிகளும் அடங்கும். மொத்தமாக தேர்தல் பணியில் 23 ஆயிரம் ஊழியர்கள் பங்கேற் கின்றனர்.
வாக்குச் சாவடிகளில் அலுவலர் களாக பணிபுரிய மாநகராட்சியின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 18 ஆயிரம் ஊழியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர் களுக்கு கடந்த வாரம் 16 மையங் களில் பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சிக்கு அழைக்கப்பட்டிருந்த வர்களில் 2 ஆயிரத்துக்கும் மேற் பட்டோர் அதில் பங்கேற்கவில்லை. எனவே பயிற்சிக்கு வராத ஊழியர்களிடம் விளக்கம் கேட்டு, மாவட்ட தேர்தல் நிர்வாகம் நோட் டீஸ் அனுப்பியுள்ளது.
மேலும் மாநகராட்சி அலுவலகத் தில் முக்கிய பொறுப்புகளில் உள்ள அதிகாரிகளுக்கு தெரிந்தவர்கள், அந்தந்த அதிகாரிகளை நேரில் சந்தித்து, தங்களுக்கு தெரிந்த மற்றும் குடும்ப நபர்களுக்கு, தேர் தல் பணியில் இருந்து விலக்கு அளிக்க உதவி கேட்டு வருகின்றனர். அவ்வாறு மாவட்ட தேர்தல் அலுவலகத்துக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனுக்கள் வந்துள்ளன.
ஏற்கத் தகாத காரணங்களுடன் யாரேனும் தேர்தல் பணிக்கு விலக்கு கோரி வந்தாலோ, அவர்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சிபாரிசு செய்தாலோ, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட தேர்தல் அலுவலர் பி.சந்தரமோகன் எச்சரித்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், மருத் துவச் சான்றுகளுடனும், திருமண அழைப்பிதழ்களுடனும், தேர்தல் பணி விலக்கு கோரி மாவட்ட தேர் தல் அலுவலகத்தை ஊழியர்கள் படையெடுப்பது அதிகரித்து வருகி றது.
இது தொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலர் பி.சந்தரமோகனிடம் கேட்டபோது, முதல்கட்ட பயிற்சி யில் 2 ஆயிரத்து 707 ஊழியர்கள் பங்கேற்கவில்லை. அவர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப் பப்பட்டுள்ளது. அவர்களுக்கு செவ்வாய்க்கிழமை மறு பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஏன் விலக்கு பெற விரும்புகின்றனர்?
சென்னை மாநகராட்சி செங்கொடி ஊழியர் சங்க பொதுச் செயலர் பி.நிவாசலு கூறும்போது, “தேர்தல் பணிக்கு செல்வதென்றால், 2 நாட்கள் பயிற்சிக்கு செல்ல வேண்டும். தேர்தலுக்கு ஒரு நாள் முன்னதாக காலையில் சென்று, வாக்குச் சாவடிகளுக்கு தேவையான பொருட்களைப் பெற்றுக்கொண்டு, வாக்குச் சாவடிகளுக்கு செல்ல வேண்டும். அடிப்படை வசதிகள் இல்லாத வாக்குச் சாவடிகளில் இரவில் தங்க வேண்டும். தற்போது மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு நீட்டிக்கப்பட்டுள்ளது. வாக்குப் பதிவு முடிந்த பிறகு, வாக்குப் பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக அனுப்பி வைக்கும் வரை வாக்குச்சாவடியிலேயே காத்திருக்க வேண்டும். அங்கு போதிய பாதுகாப்பு இல்லை. ஊதியமும் குறைவு என்பன உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஊழியர்கள், தேர்தல் பணியிலிருந்து விலக்கு பெற விரும்புகின்றனர்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT