Published : 19 Jun 2022 02:48 PM
Last Updated : 19 Jun 2022 02:48 PM

கடத்தப்பட்ட தெய்வ விக்கிரகங்களை மீட்க உலக சிவனடியார்கள் அமைப்பு பாடுபடும்: பொன் மாணிக்கவேல் பேச்சு

உலக சிவனடியார்கள் அமைப்பு சார்பில் நடைபெற்ற முப்பெரும்விழாவில் கலந்துகொண்டு முன்னாள் காவல் அதிகாரி பொன்.மாணிக்கவேல் பேசுகிறார்.

தருமபுரி: கடத்தப்பட்ட தெய்வ விக்கிரகங்களை மீட்பதற்கு உலக சிவனடியார்கள் அமைப்பு தொடர்ந்து பாடுபடும் என தமிழக காவல்துறையின் சிலை கடத்தல் கடுப்பு பிரிவு முன்னாள் தலைவரும் உலக சிவனடியார்கள் அமைப்பின் தலைமை ஆலோசகருமான பொன் மாணிக்கவேல் தருமபுரியில் பேசினார்.

தருமபுரியில் உலக சிவனடியார்கள் அமைப்பு சார்பில் முப்பெரும் விழா இன்று (ஞாயிறு) நடந்தது. இந்த விழாவில் தலைமை ஏற்று பேசிய பொன் மாணிக்கவேல், ''உலகத்தில் உள்ள அனைத்து சிவனடியார்களையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வர வேண்டும், ஆலயங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு உலக சிவனடியார்கள் அமைப்பு செயல்பட்டு வருகிறது.

சிறப்பு மிகுந்த கோயில் விக்ரகங்களை பரிசாகவும் கொடையாகவும் வழங்குவது அந்த தெய்வங்களை அவமரியாதை செய்வதற்குச் சமம். இச்செயல்களை யார் செய்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கடத்தப்பட்ட அல்லது திருடப்பட்ட கோயில் சிலைகளை மீட்பதற்கு உலக சிவனடியார்கள் அமைப்பு தொடர்ந்து பாடுபடும். இதற்காக மத்திய அரசு மற்றும் உச்ச நீதிமன்றத்தை நாடுவதற்கு தயங்காது'' என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x