Published : 19 Jun 2022 09:15 AM
Last Updated : 19 Jun 2022 09:15 AM
உடுமலை அருகே கொண்டம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கிராமத்தில், கடந்தசில ஆண்டுகளாக தனியாருக்கு சொந்தமான அலுமினிய பொருட்கள்உற்பத்தி ஆலை இயங்கி வருகிறது.இந்த ஆலையை சுற்றிலும் நூற்றுக்கணக்கான ஏக்கர் வேளாண் நிலங்கள் உள்ளன. அதில் தக்காளி, மிளகாய்,வெங்காயம், அவரை, கொள்ளு உள்ளிட்ட காய்கறி பயிர்களும், தென்னை,மக்காச்சோளமும் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. தனியார் ஆலையில்இருந்து வெளியேறும் நச்சுப் புகையால், சுற்று வட்டாரத்திலுள்ள வேளாண் பயிர் விளைச்சல் பாதிக்கப்படுவதாக அப்பகுதி விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட விவசாயி பொன்னுசாமி கூறும்போது, "கேரளாவை பூர்வீகமாக கொண்ட தனியார் நிறுவனம் சுமார் 12 ஏக்கர்பரப்பில், தனது தொழிற்சாலையை நடத்தி வருகிறது. பெட்ரோலியம் தொடர்பான பொருள் உற்பத்தி என்ற பெயரில் அனுமதி பெற்றிருந்தபோதும், அங்கு ராட்சத தொட்டிகளில் கொதிக்கும் அலுமினிய கூழ் ஊற்றி நிரப்பப்படுகிறது. பின்னர், கருப்பு நிற பொருட்களுக்கு பாலிஷ் செய்யப்படுகிறது. அதன்பின், புத்தம் புதிய பொருளாக மாற்றப்படுகிறது. இப்பணிகளின்போது ஆலையில் இருந்துநச்சுப் புகை வெளியேறுகிறது.
அந்தப்புகையை சுவாசிப்பதால்சிலருக்கு மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. கொண்டம்பட்டி, வசவ நாயக்கன்பட்டி, மசக்கவுண்டன்புதூர் உள்ளிட்ட கிராமங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். சுமார் 300 ஏக்கரில் விவசாயம் நடைபெறுகிறது. நச்சுப் புகையால் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாவதோடு, வேளாண் தொழிலும் அடியோடு பாதிக்கும் சூழல் உள்ளது.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகம், சுற்றுச் சூழல் துறையினர் நேரில்ஆய்வு செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கெனவேபலமுறை புகார் அனுப்பியும் நடவடிக்கை எடுக்கவில்லை. விரைவில் பாதிக்கப்பட்ட விவசாயி களை திரட்டி அமைதியான முறையில் போராட்டம் நடத்தவும் விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT