Published : 19 Jun 2022 04:00 AM
Last Updated : 19 Jun 2022 04:00 AM
சேலத்தில் ரயில்வே பாலம் பாராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுவதால், நாளை (20-ம் தேதி) சேலம் வழியாக செல்லும் ரயில்களின் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்துக்கும் சேலம் அருகேயுள்ள மேக்னசைட் ரயில் நிலையத்துக்கும் இடையே உள்ள இரு ரயில்வே பாலங்களில் மறுசீரமைப்பு பணி நாளை நடைபெறவுள்ளது. எனவே, சேலம், ஈரோடு, கோவை வழியாகவும், சேலம், கரூர், நாமக்கல் வழியாகவும் செல்லும் ரயில்கள் இயக்கத்தில் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, நாளை (20-ம் தேதி)ஆலப்புழாவில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட வேண்டிய ஆலப்புழா- தன்பாத் விரைவு ரயில் (13352) மற்றும் எர்ணாகுளத்தில் இருந்து காலை 9.30 மணிக்கு புறப்பட வேண்டிய பெங்கரூரு விரைவு ரயில் 3 மணி நேரம் காலதாமதமாக புறப்படும். கோவையில் இருந்து பிற்பகல் 3.05 மணிக்கு புறப்பட வேண்டிய கோவை- சென்னை சென்ட்ரல் சதாப்தி விரைவு ரயில் (12244) ஒரு மணி நேரம் காலதாமதமாக புறப்படும். கோவையில் இருந்து பிற்பகல் 3.15 மணிக்கு புறப்பட வேண்டிய கோவை- சென்னை சென்ட்ரல் கோவை எக்ஸ்பிரஸ் ரயில் (12676) 1 மணி நேரம் காலதாமதமாக புறப்படும்.
நாகர்கோவில்-மும்பை சிஎஸ்எம்டி விரைவு ரயில் (16340), நாகர்கோவில் ரயில் நிலையத்திலிருந்து காலை 6 மணிக்கு புறப்பட வேண்டிய ரயில், 2 மணி நேரம் கால தாமதமாக புறப்படும். ஜோலார்பேட்டையில் இருந்து பிற்பகல் 3.10 மணிக்கு புறப்பட வேண்டிய ஜோலார்பேட்டை-ஈரோடு முன்பதிவில்லா விரைவு ரயில் (06411) ஒரு மணி நேரம் காலதாமதமாக புறப்படும்.
மேலும், ராஜ்கோட்- கோவை எக்ஸ்பிரஸ் ரயில் (16613) 40 நிமிடம் காலதாமதமாக, இரவு 9.30 கோவை ரயில் நிலையம் சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment