Published : 16 Jun 2022 12:31 PM
Last Updated : 16 Jun 2022 12:31 PM
கோத்தகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கூக்கல்தொரை கிராமத்தில் பெய்த கனமழை காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய பெண் உயிரிழந்தார். இரவு முழுவதும் தேடியும் கிடைக்காமல் இன்று காலை மசகல் பகுதியில் ஆற்று ஓரம் புதர் சூழ்ந்த பகுதியில் சடலமாக மீட்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம் கூக்கல் தொரை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று மாலை ஐந்து மணி அளவில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது. அப்போது அதிக மழை பெய்து விவசாயம் செய்யக்கூடிய விளை நிலங்கள், சாலைகள் எங்கும் மழைநீர் தேங்கி காட்டாற்று வெள்ளம் சூழ்ந்தது. அப்போது தீனட்டி பகுதியைச் சேர்ந்த ஆலம்மாள் என்பவர் தேயிலை தோட்டத்திற்கு பணிக்கு சென்று அதிக மழை பெய்து வருவதால் வீட்டிற்கு திரும்பும் போது தரைப்பாலம் முற்றிலுமாக அடைப்பு ஏற்ப்பட்டு தண்ணீர் தரைப்பாலத்தை தாண்டி வெள்ளம் அதிக அளவு வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
அப்போது ஆலம்மாள் என்பவர் எதிர்பாராமல் சாலை என்று நினைத்து சிறு ஓடையை தாண்டும் போது வெள்ளத்தில் சிக்கி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உள்ளார். இரவு நேரம் ஆகியும் ஆலம்மாள் வீடு திரும்பாத நிலையில் அவரது மகன்கள், ஊர் பொதுமக்கள் அனைவரும் இரவு 12 மணி வரை உறவினர்களின் வீடுகள், விளைநிலங்கள், சாலைகள் போன்ற பகுதிகளில் தேடியுள்ளனர். நீண்ட நேரம் தேடியும் கிடைக்க வில்லை.
இன்று காலை மீண்டும் தேடும் போது இறந்த நிலையில் கூக்கல்தொரை அருகேயுள்ள மசகல் பகுதியில் ஆற்று ஓரம் முட்புதரில் சிக்கி நிலையில் சடலமாக மீட்க்கப்பட்டார். இது குறித்து கோத்தகிரி காவல்நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டு பிரேதத்தை கைப்பற்றி, கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மாவட்டத்தில் அதிகபட்சமாக கோட்பாட்டில் 30 மி.மீ.. மழை பதிவானது. உதகையில் 10.2, தேவாலாவில் 21, அப்பர் பவானியில் 29, கெத்தையில் 15, ஙிண்ணக்கொரையில் 10, பாலகொலாவில் 25 மி.மீ., மழை பதிவானது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT