Last Updated : 20 May, 2016 01:18 PM

Published : 20 May 2016 01:18 PM
Last Updated : 20 May 2016 01:18 PM

திருச்செந்தூரில் சரத்குமார் தோல்வி: 5-வது முறையாக செல்வாக்கை நிரூபித்தார் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன்

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தொகுதியான திருச்செந்தூரில் அதிமுக கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் போட்டியிட்டார். அவரை எதிர்த்து திமுக சார்பில் ஏற்கெனவே அத்தொகுதியில் 4 முறை வெற்றிபெற்றுள்ள அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் போட்டியிட்டார். தேர்தல் பிரச்சாரத்தின்போது இரு வருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வந்தது.

இந்நிலையில் நேற்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கி முதல் சுற்றில் இருந்து கடைசி சுற்று வரை அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் முன்னிலையில் இருந்து வந்தார். இறுதியாக 26,001 வாக்குகள் வித்தியாசத்தில் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார்.

திருச்செந்தூர் தொகுதியில் கடந்த 2001 முதல் அசைக்க முடியாத சக்தியாக அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் இருந்து வருகிறார். கடந்த 2001-ம் ஆண்டு அதிமுக சார்பில் இந்த தொகுதியில் வென்று அமைச்சராக பதவி வகித்தார். 2016 தேர்தலிலும் வெற்றிபெற்றார். 2009-ல் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்து, அதன் பின் நடைபெற்ற இடைத்தேர்தலிலும் வெற்றிபெற்றார். தொடர்ந்து 2011 தேர்தலிலும், தற்போது 5-வது முறையாக 2016 தேர்தலிலும் வெற்றிபெற்றுள்ளார்.

அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் கூறும் போது, “தொகுதி மக்கள் என் மீது நம்பிக்கை வைத்து இந்த வெற்றியை தந்துள்ளனர். அந்த நம்பிக்கையை நிச்சயம் காப்பாற்றுவேன். மக்களுக்கு தேவை யான பணிகளை கண்டிப்பாக செய்வேன் என்றார் அவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x