Published : 18 May 2016 09:55 AM
Last Updated : 18 May 2016 09:55 AM

மதிப்பெண்ணை வைத்து குழந்தைகளை மதிப்பிடாதீர்கள்: அறிவாற்றல் அறிவியல் ஆராய்ச்சி கல்வியாளர்கள் வேண்டுகோள்

தேர்வு மதிப்பெண் வைத்து குழந்தைகளை மதிப்பிடாதீர்கள் என பெற்றோருக்கு அறிவாற்றல் அறிவியல் ஆராய்ச்சி கல்வி யாளர்கள் வேண்டுகோள் விடுத் துள்ளனர்.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியாயின. இந்த தேர் வில் பெற்ற மதிப்பெண்ணால் மாணவ, மாணவிகளுக்கு மகிழ்ச்சி யும், ஏமாற்றமும் இருக்கலாம். எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக் காமல் சிறந்த கல்லூரிகளில், சிறப்பான படிப்புகளில் சேர முடியாதே என்ற ஏக்கம் மாணவ, மாணவிகள் மற்றும் அவர் களின் பெற்றோர்களை கவலை யடையச் செய்யலாம். ஆனால், இந்த மதிப்பெண் கல்வி, வாழ்க் கையை தீர்மானிப்பது இல்லை என்றும், மதிப்பெண்ணை வைத்து குழந்தைகளை மதிப்பீடாதீர்கள் என்றும் அறிவாற்றல் அறிவியல் ஆராய்ச்சி கல்வியாளர்கள் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பல்கலைக்கழ கங்களின் பாடத்திட்ட குழு உறுப்பி னரும், காந்திகிராமம் பல்கலை கல்வியியல் துறை தலைவருமான ஜாகிதா பேகம் கூறியதாவது:

மனப்பாடம் சார்ந்த நமது கல்வி முறையில் மாணவர்களை விட மாணவிகள் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறுவது இயல்பு.

குழந்தைகளிடம் மொழி சார்ந்த நுண்ணறிவு, உடல் இயக்கம் சார்ந்த நுண்ணறிவு, இசை சார்ந்த நுண்ணறிவு, கணிதம் மற்றும் அறிவியல் சார்ந்த நுண்ணறிவு, கலந்துரையாடல் நுண்ணறிவு, தன்னைப் பற்றிய நுண்ணறிவு, பிறரைப் பற்றிய நுண்ணறிவு, இடம் சார்ந்த நுண்ணறிவு, இயற்கை சார்ந்த நுண்ணறிவு உள்ளிட்ட 8 நுண்ணறிவுகள் இருக்கின்றன. மதிப்பெண் தேர்வுகளை வைத்து இந்த நுண்ணறிவுகளை மதிப்பிட முடியாது.

மொழி சார்ந்த நுண்ணறிவு, ஓரளவு கணிதம் மற்றும் அறிவியல் சார்ந்த மனப்பாட நுண்ணறிவுகளை தேர்வு என்கிற பெயரில் மதிப்பிட லாம். அனைவரிடமும் 8 நுண்ணறி வுகளும் இருக்காது.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நுண்ணறிவுகள் இருக்கின்றன. இவற்றை குழந்தைகளிடம் பெற்றோர்கள் ஆசிரியர்கள் துணை கொண்டும், ஆசிரியர்கள் பெற்றோர் துணை கொண்டும் கண்டுபிடிக்க வேண்டும்.

பெரும்பாலான நேரங்களில் தேர்வு என்ற சோதனைக்காக குழந் தைகள் நேரத்தை செலவிடுகின்ற னர். அதனால், தேர்வுகளில் எடுக் கும் மதிப்பெண்ணை வைத்து அறிவும், ஆற்றலும் அதிகம் என்ற தவறான முடிவுக்கு வந்துவிடக் கூடாது. தேர்வு மதிப்பெண் அடுத்தகட்ட நகர்வுக்கு, அதாவது கல்லூரிகளையும், பாடம் சார்ந்த பிரிவுகளை தேர்ந்தெடுக்கவும் மட்டுமே நுழைவுச் சீட்டாக இருக்கிறது.

ஒரு மாணவருக்கு ஒரு விஷயம் நன்றாகத் தெரிந்திருக்கும். ஆனால், அவரால் எழுத்து வடிவத்தில் அவற்றை கொண்டுவர முடியாமல் இருக்கும். உடல் சார்ந்த நுண்ணறிவுகளை தேர்வுகள் கண்டுபிடிப்பதில்லை என்பதால் அந்த மாணவரின் நுண்ணறிவு வெளிப்படாமல் இருக்கும்.

பள்ளித் தேர்வுகள் மாணவர் களின் மனப்பாடத் திறனையும், மொழி நுண்ணறிவையும் பிரதி பலிப்பதால் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்க ளால்கூட சில சமயம் எதிர்கால வாழ்க்கையில் சாதிக்க முடி யாமல்கூட போகலாம். இதற்கு கல்வித் திட்டமும், ஆசிரியர்கள், பெற்றோர் அணுகுமுறையும், தேர்வு முறைகளும் முக்கிய காரணம். இந்த முறைகளில் மாற்றம் வர வேண்டும். குழந்தைகளிடம் இருக்கும் நுண்ணறிவுகளை தேடி கண்டுபிடிப்பது ஆசிரியர், பெற்றோர்களின் கடமை. இவர்கள் இந்தக் கடமையை சரியாக செய்தால் மாணவ, மாணவியரின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும்.

தற்போது பள்ளிகள் மதிப்பெண் பெற முக்கியத்துவம் கொடுக்கிற தொழிற்சாலைகளாக மாறி வருவது துரதிர்ஷ்டவசமானது. பெரும்பாலும் பள்ளிகள் மாண வர்களின் அடைவு திறனை, நுண் ணறிவு திறனை சோதிப்பது இல்லை. வாழ்க்கைக்கு உகந்த மனிதனாக மாணவர்களை மாற் றுவதற்குப் பதிலாக, மனப்பாடம் செய்யும் மெஷினாக மாற்றுகின்றன. இதை மாற்ற அரசின் கல்வித் திட்ட கொள்கைகளை ஆராய்ச் சிப்பூர்வமாக ஆய்வுகள் அடிப் படையில் மாற்ற வேண்டும். கல்வியாளர்கள் மட்டுமே கல்விக் கொள்கைகளைத் தீர்மானிக்க வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x