Published : 14 Jun 2022 04:22 PM
Last Updated : 14 Jun 2022 04:22 PM
சென்னை: “வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் காதலித்து திருமணம் செய்துகொண்டால், அவர்களைக் கொல்வதுதான் கௌரவமா? கொலையாளிகளுக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும்” என்று மக்கள் நீதி மய்யம் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து அக்கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "கும்பகோணம் அருகே காதல் திருமணம் செய்த இளம் தம்பதியை, விருந்துக்கு வரச் சொன்ன பெண்ணின் அண்ணன், இருவரையும் அரிவாளால் வெட்டிக் கொலை செய்தது வேதனையளிக்கிறது.
வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் காதலித்து திருமணம் செய்துகொண்டால், அவர்களைக் கொல்வதுதான் கௌரவமா? கொலையாளிகளுக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும். காதலில் கெளரவம் பார்க்கத் தேவையில்லை; ஆணவமும் அவசியமில்லை என்று மக்களிடம் மாற்றம் ஏற்பட வேண்டும்" என்று மக்கள் நீதி மய்யம் கட்சி வலியுறுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT ( 1 Comments )
இதுபோன்று கொலைகள் நடந்துகொண்டே தான் இருக்கிறது. சில வழக்குகளில் தீர்ப்புகளும் வருகிறது .ஆனால் பெரிதாக தண்டிக்கப்பட்டது போல தோணவில்லை. வீட்டின் வாசலில் வைத்து கொலை செய்கிறார்கள். கண்டிப்பாக சிக்குவோம் என்று தெரியும். ஆனாலும் எங்க இருந்து இந்த தைரியம் வருகிறது. மீதி வாழ்க்கையை சிறையில் தான் என்பது அவர்களுக்கு நன்றாக தெரியும். அதையும் தண்டி கோவம் கொலை செய்ய தூண்டுகிறது. இதை எப்படி தடுப்பது என்றே தெரியவில்லை.
0
0
Reply