Last Updated : 30 May, 2016 01:03 PM

 

Published : 30 May 2016 01:03 PM
Last Updated : 30 May 2016 01:03 PM

கோடை விடுமுறை இறுதி நாட்கள்: ஏற்காட்டில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

கோடை விடுமுறை கடைசி ஞாயிறான நேற்று ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் வழக்கத்தை விட அதிகம் இருந்தது.

கிழக்கு தொடர்ச்சி மலையில் உள்ள சேர்வராயன் மலையான ஏற்காடு ஏழைகளின் ஊட்டி என வர்ணிக்கப்படுகிறது. கடல் மட்டத் தில் இருந்து 5,326 அடி உயரத்தில் உள்ள ஏற்காட்டில் கோடையில் குளிர்ச்சியான தட்ப வெப்ப நிலை நிலவுவதாலும், சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிக்கக் கூடிய இடங்கள் பல இங்கு இருப்பதால், சுற்றுலாப் பயணிகளை ஏற்காடு மிகவும் கவரும்.

குறிப்பாக, சுற்றுலாப் பயணிகள் விரும்பும் படகு சவாரி, குழந்தைகளும் பெண்களும் விரும்பும் மலர்த்தோட்டம், மலை உச்சியில் இருந்து சேலம் மாநகரை கழுகு பார்வையில் பார்க்கக் கூடிய பக்கோடா பாயின்ட், ஆன்மிகத்தை விரும்புபவர்களுக்கான சேர்வராயன் குகைக் கோயில், ராஜராஜேஸ்வரி கோயில், இயற்கை அழகை காண விரும்புப வர்களுக்கு காபி எஸ்டேட் என ஏற்காட்டில் கண்டு ரசிப்பதற்கான இடங்கள் ஏராளமாக உள்ளன.

கோடை விடுமுறையில் தமிழகம் மட்டுமல்லாது, கேரள, கர்நாடக, ஆந்திரா, புதுச்சேரி ஆகிய அண்டை மாநிலங்களில் இருந்தும் இங்கு அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வருகை ஆண்டுதோறும் இருக்கும். சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் ஊட்டி, கொடைக்கானல் போல ஏற்காட்டிலும் ஆண்டு தோறும் கோடைவிழா நடத்தப் படும். கடந்த ஆண்டு ஜூன் முதல் வாரத்தில் கோடை விழா நடந்தது. இந்தாண்டு விழா குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இல்லை.

இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக கோடை விடுமுறையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அண்டைய மாநிலங்களில் இருந்தும் அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் ஏற்காட்டுக்கு வந்தனர். அக்னி நட்சத்திர நாட்களில் ஏற்காட்டில் பல நாட்கள் மழை பெய்ததால், குளிர்ந்த சீதோஷ்ண நிலை ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில் கோடை விடுமுறை இறுதி ஞாயிற்று கிழமை யான நேற்று வழக்கத்தை விட ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதியது. பயணிகள் அண்ணா பூங்காவில் வைக்கப்பட்டிருந்த மலர் செடிகளை பார்த்து ரசித்தனர். மேலும் ஏற்காடு ஏரியில் படகு சவாரி செய்தும் மகிழ்ந்தனர்.

சேலத்தில் இருந்து பலர் இரு சக்கர வாகனங்களில் ஏற்காடு வந்திருந்தனர். பயணிகள் கூட்டம் அதிகம் இருந்ததால், ஏற்காட்டில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

அடிப்படை வசதி குறைவு

சுற்றுலாப் பயணிகளை கவர்ந்த ஏற்காட்டில் அடிப்படை வசதிகள் குறைபாடுகள் இருப்பது பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மலைப்பாதைகள் பல இடங் களில் பாதுகாப்பற்ற நிலையிருப் பதோடு, பயணிகளுக்கு தேவை யான அடிப்படை வசதிகள் இல்லாமல் இருப்பது வேதனை அளிப்பதாக பயணிகள் குற்றம்சாட்டினர்.

குறிப்பாக சுகாதார வசதி களை மேம்படுத்துவதோடு, கழிப் பறைகள், சுற்றுப்புற சுகா தாரத்தை பேணி காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பயணிகள் எதிர்பார்ப் பாக உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x