Published : 12 Jun 2014 07:52 PM
Last Updated : 12 Jun 2014 07:52 PM

தமிழகத்தில் வயது முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு இலவச பேருந்து பயண அட்டை

தமிழகத்தில் வயது முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் தமிழ்நாட்டிற்குள் இலவச பயணம் மேற்கொள்ளும் நலத்திட்டத்தை மாநில அரசு செயல்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக தமிழ் வளர்ச்சி இயக்குநர் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், 'தமிழ் வளர்ச்சித் துறையில் செயற்படுத்தப்பட்டு வரும் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் தற்போது மாதம் தோறும் ரூ.2000/- உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இந்த உதவித்தொகை பெற்றுவரும் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கும் உதவித் தொகை பெற்று வரும் மரபுரிமையர்களுக்கும் அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் தமிழ்நாட்டிற்குள் இலவச பயணம் மேற்கொள்ள முதல்வர் ஜெயலலிதாவால் ஆணையிடப்பட்டுள்ளது.

இந்த இலவசப் பேருந்துப் பயண அட்டை பெற அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் மற்றும் உதவித் தொகை பெற்று வரும் மரபுரிமையர்கள், அவரவர்களுக்கு அரசால் ஒப்பளிப்பு செய்யப்பட்ட அரசாணையின் நகல், மாநிலக் கணக்காய்வுத் தலைவரால்

ஒப்பளிப்பு செய்யப்பட்ட கொடுப்பாணை எண், நிழற்படம் ஆகியவற்றுடன் அந்தந்த மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு சென்று உரியவாறு பதிவு செய்து கொண்டு அவர்கள் அளிக்கும்

சான்றினைப் பெற்றுக் கொண்டு உரிய போக்குவரத்து அலுவலக மேலாண்மை இயக்குநர் /கிளை மேலாளர் அலுவலகத்தினை அணுகி பேருந்து இலவசப் பயண சலுகை அட்டை பெற்றுக் கொள்ளலாம்.

இந்த இலவச பயணப் பேருந்து அட்டையினை ஒவ்வொரு ஆண்டும் இதே முறையில் புதுப்பித்துக் கொள்ள வேண்டும்' என்று அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x