Published : 10 Jun 2022 07:16 PM
Last Updated : 10 Jun 2022 07:16 PM
சென்னை: ரூ.10 செலுத்தினால் மஞ்சப்பை வழங்கும் விற்பனை இயந்திரம் மூலம் கடந்த 6 நாட்களில் 1,000 மஞ்சப்பைகளை பொதுமக்கள் வாங்கிச் சென்றுள்ளனர்.
பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக மஞ்சள் பைகளை பயன்படுத்தும் விதமாக, ’மீண்டும் மஞ்சப்பை’ என்ற மக்கள் இயக்கத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த டிசம்பர் மாதம் தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து இந்த இயக்கத்தை பொதுமக்களிடம் கொண்டு செல்லும் பணியில் சுற்றுச்சூழல் துறை தீவிரமாக ஈடுபட்டுவருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் பொது இடங்களில் மஞ்சப்பை இயந்திரம் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதன்படி, உலகச் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் மெய்யநாதன் இந்த இயந்திரத்தை அறிமுகம் செய்துவைத்தார். இதனைத் தொடர்ந்து கோயம்பேடு மார்க்கெட்டில் இந்த இயந்திரம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வைக்கப்பட்டது. பொதுமக்கள் ரூ.10 செலுத்தி இயந்திரம் மூலம் மஞ்சப்பையை பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தொடங்கிய 6 நாட்களில் 1,000 மஞ்சப்பைகள் இந்த இயந்திரம் மூலம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் துறை முதன்மைச் செயலர் ப்ரியா சாஹூ தெரிவித்துள்ளார்.
Reviewed the Manjapai Vending Machine functioning at Koyambedu Whole Sale Market,About 1000 Manjapais (cloth bags) sold at Rs 10 a piece in the last 6 days.Some glitches but mostly great going
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT