Published : 26 Jun 2014 08:27 AM
Last Updated : 26 Jun 2014 08:27 AM
கோயம்பேடு பேருந்து நிலையத் தில் ஒடிசாவை சேர்ந்த பயணியிடம் இருந்து 4 கிலோ தங்க கட்டிகள், 4.5 கிலோ நகைகள், ரூ.8 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல பேசின்பிரிட்ஜ் அருகே ஒரு வியாபாரியிடம் இருந்து 12 கிலோ வெள்ளிக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
'ஆம்லா' என்ற பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி தமிழ்நாடு முழு வதும் புதன் மற்றும் வியாழக் கிழமைகளில் நடக்கிறது. தீவிர வாதிகள்போல வேடமணிந்து ஆயுதங்களுடன் வரும் போலீ ஸாரை அடையாளம் கண்டு பிடிக்க இந்த ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதனால் சென்னையில் உள்ள ரயில் நிலை யங்கள், பேருந்து நிலையங்களில் காவல் துறையினர் தீவிர கண் காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கோயம்பேடு பேருந்து நிலையத்தின் அனைத்து நுழைவு வாயில்களிலும், பேருந்து நிலையத்திற்கு உள்ளேயும் காவல் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். புதன்கிழமை அதிகாலை 2 மணியளவில் ஒரு கைப்பையுடன் வந்த பயணி ஒருவரை பிடித்து காவல் துறையினர் சோதனை செய்தனர். அப்போது அந்த பையில் 4 கிலோ தங்க கட்டிகள், 4.5 கிலோ நகைகள் இருந்ததை கண்டுபிடித்தனர்.
விசாரணையில், தங்க கட்டிகளை கொண்டு வந்தவரின் பெயர் சாந்தாராம் என்பதும், ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தை சேர்ந்தவர் என்பதும் தெரிந்தது. ஒடிசாவில் இருந்து ரயில் மூலம் தங்கத்தை சென்னைக்கு கொண்டு வந்ததும், பின்னர் சென்னையில் இருந்து கோவைக்கு பேருந்து மூலம் கொண்டு செல்ல இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. தங்கக் கட்டிகளுக்கான எந்த ஆவணங்களும் அவரிடம் இல்லை. இதனால் அவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ரூ.8 லட்சம் ரொக்கப் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.
12 கிலோ வெள்ளி சிக்கியது
‘ஆம்லா' சோதனையை தொடர்ந்து புதன்கிழமை அதிகாலையிலேயே தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டது. பேசின்பிரிட்ஜ் பாலம் அருகே மாலிக் என்பவரின் காரை நிறுத்தி நடத்தப்பட்ட சோதனையில் 12 கிலோ வெள்ளிக் கட்டிகள் இருந்தன. சவுகார்பேட்டையில் நகைக்கடை வைத்திருப்பதாகவும் அதற்காக வாங்கிச் செல்வதாகவும் மாலிக் கூறினார். ஆனால், அதற்கான ஆவணங்கள் எதுவுமே அவரிடம் இல்லாததால் 12 கிலோ வெள்ளியும் பறிமுதல் செய்யப்பட்டது. பிடிபட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT