Published : 08 Jun 2022 02:13 PM
Last Updated : 08 Jun 2022 02:13 PM
சென்னை: பொறியியல் படிப்புகளுக்கு வரும் 20-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
பொறியியல் சேர்க்கை குறித்து உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி மாணவப் பிரதிநிதிகள், ஆசிரியர்கள், பேராசிரியர்களுடன் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார்.
இதனைத் தொடர்ந்து தலைமைச் செயலகத்தில் அவர் அளித்த பேட்டியில், "கடந்த ஆண்டு அண்ணா பல்கலைக்கழகத்தில் 631 இடங்கள் காலியாக இருந்தன. நீட் தேர்வு முடிவுகள் வெளியான பிறகு பொறியியல் கலந்தாய்வு நடத்தப்படவுள்ளது.
பொறியியல் மாணவர்கள் சேர்க்கை தொடர்பான அறிவிப்பு 20-ம் தேதி வெளியிடப்பட்டு அன்றைய தினம் ஆன்லைன் மூலம் விண்ணப்பப் பதிவு தொடங்கும். ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க ஜூலை 19-ம் தேதி இறுதி நாள். 22-ம் தேதி ரேண்டம் எண் வெளியிடப்படும்.
ஜூலை 20-ம் தேதி முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெறும்
ஆகஸ்ட் 8-ம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். ஆகஸ்ட் 16-ம் தேதி முதல் செப்டம்பர் 14-ம் தேதி இணையதளம் வழியாக கலந்தாய்வு நடைபெறும்" என்று அமைச்சர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT