Published : 06 Jun 2022 06:02 PM
Last Updated : 06 Jun 2022 06:02 PM
மதுரை: சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் காவலருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகள் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கொலை செய்யப்பட்ட வழக்கில் சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள், சிறப்பு சார்பு ஆய்வாளர், காவலர்கள் என 9 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் காவலர் சாமதுரையும் ஒருவர்.
இவர் கைது செய்யப்பட்ட நாளிலிருந்து மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரது ஜாமீன் மனுக்கள் நீதிமன்றங்களில் தள்ளுபடியானது.
இந்நிலையில், தனது மகளின் பூப்புனித நீராட்டு விழாவில் பங்கேற்பதற்காக தனக்கு ஜூன் 7-ம் தேதி வரை இடைக்கால ஜாமீன் கேட்டு அவர் உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை நீதிபதி முரளிசங்கர் இன்று விசாரித்து, இன்று பகல் 1 மணி முதல் நாளை மாலை 4 மணி வரை சாமதுரைக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT