Last Updated : 16 May, 2016 11:29 AM

 

Published : 16 May 2016 11:29 AM
Last Updated : 16 May 2016 11:29 AM

மே 19 தான் தமிழகத்தின் விடுதலை நாள்: அன்புமணி

இந்தியாவின் விடுதலை நாள் ஆகஸ்ட் 15 1947ம் ஆண்டு. ஆனால் தமிழகத்தின் விடுதலை நாள் மே 19ம் தேதி என்று பாமக முதலமைச்சர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

திண்டிவனம் மரகாதாம்பிகை உயர்நிலைப்பள்ளியில் இன்று காலை பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக முதலமைச்சர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் வாக்களித்தனர்.

தொடர்ந்து அன்புமணி கூறியதாவது;, இந்தியாவின் சுதந்திரதினம் ஆகஸ்ட் 15ம் தேதி , தமிழகத்தின் விடுதலை வரும் 19ம் தேதி. பாமக ஆட்சி ஒரு வாரத்தில் நடப்பது உறுதி. . 50 ஆண்டுகால திராவிட ஆட்சியின் பிடியில் இருந்து விடுபடும் நாள். புதிய ஆட்சி வேண்டும் என மக்கள் ஏக்கத்தில் உள்ளனர்.

எங்களுக்கு ஆர்வமாக வாக்களிட்து வருகின்றனர். திராவிட கட்சிகள் அரசியலை வியாபாரமாக செய்து வருகின்றன. நான் சேவையாக செய்கிறேன். நாங்கல் நல்லாட்சியை கொடுப்போம் என மக்கள் நம்புகிறார்கள். ஓரு வாரத்தில் பாமக ஆட்சி அமைவதுஉறுதி.

தேர்தலுக்கு முன்பாகவே வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து திராவிட கட்சிகள் ஊழல் செய்து வருகிறன. நாங்கள் திமுக, அதிமுக வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய சொன்னோம். . ஆனால் தேர்தல் ஆணையம் அதை செய்யவில்லை. அதனால் மக்கள் ஆத்திரத்தோடு எங்களுக்கு வாக்களிக்கிறார்கள் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x