Published : 05 Jun 2022 04:02 PM
Last Updated : 05 Jun 2022 04:02 PM
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு ஏற்பாட்டு செய்யப்பட்டுள்ள முதலாவது சென்னை மலர் கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள், அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதன்படி கடந்த ஜூன் 3ம் தேதி கருணாநிதி பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, சென்னையில் மலர் கண்காட்சிக்கு அரசு ஏற்பாடு செய்தது.
கலைவாணர் அரங்கில் 3ம் தேதி தொடங்கிய மலர் கண்காட்சி இன்று நிறைவு பெறுகிறது. இந்த மலர் கண்காட்சியில் ஊட்டி, ஓசூர், திண்டுக்கல், பெங்களூரு, புனேவில் போன்ற இடங்களில் இருந்து சுமார் 200 வகை மலர்கள் கொண்டுவரப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த மலர் கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். நேற்று வரை சென்னை மலர் கண்காட்சி நுழைவு கட்டணமாக ரூ.8.35 லட்சம் வசூல் செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் ரூ.20-ம், பெரியவர்கள் ரூ.50-ம் கட்டணம் செலுத்தி மலர் கண்காட்சியை பார்வையிடலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment