Published : 04 Jun 2022 09:36 PM
Last Updated : 04 Jun 2022 09:36 PM

‘நீங்க யார் வீட்டுக்குப் போகணும்?’ - சென்னை வீதிகளில் அனுமதியின்றி முளைக்கும் ‘செக் போஸ்ட்’!

சென்னை: சென்னையில் ஒரு சில சாலைகளின் நுழைவு வாயிலில் குடியிருப்புவாசிகள் இணைந்து செக் போஸ்ட் அமைத்துள்ளனர். எங்கே போகிறோம் என்பதைக் கூறினால் மட்டுமே இந்தத் தெருக்களில் அனுமதி அளிக்கப்படுகிறது.

சென்னை மாநகராட்சியில் 10,000-க்கும் மேற்பட்ட சாலைகள் உள்ளன. பேருந்து சாலைகள், உட்புறச் சாலைகள் என்று பிரிக்கப்பட்டு சென்னை மாநகராட்சி சார்பில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பேருந்து சாலைகளில் நிழற்குடைகள் அமைப்பது, அழகுபடுத்தவது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. உட்புற சாலைகளில் மரங்கள் நடுவது, தூய்மைப் பணிகள் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் சென்னை மாநகராட்சிதான் செய்கிறது.

இவ்வாறு சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான சாலைகளில் ஏதாவது மாற்றம் செய்ய வேண்டும் என்றால், சென்னை மாநகராட்சியிடம் உரிய அனுமதி பெற வேண்டும். ஆனால், சென்னை மாநகராட்சிகளில் ஒரு சில சாலைகளில் உரிய அனுமதி பெறாமல் ‘செக் போஸ்ட்’ அமைத்துள்ளனர் குடியிருப்புவாசிகள்.

குறிப்பாக, ‘எங்கே போகிறோம்’ என்பதை கூறினால் மட்டுமே சாலைகளுக்கு உள்ளே செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது.

சென்னை, புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோயில் சாலையில், கங்காதீஸ்வரர் கோயிலுக்கு எதிரில் காந்தி அவென்யூ என்ற தெரு உள்ளது. இந்தத் தெருவின் நுழைவு வாயிலில் அந்தப் பகுதி குடியிருப்புவாசிகள் இணைந்து ‘செக் போஸ்ட்’ அமைத்துள்ளனர். மேலும், காவலாளி ஒருவரையும் பணிக்கு அமர்த்தியுள்ளனர்.

இந்தத் தெருவில் வசிப்பவர்களைத் தவிர்த்து வேறு யாராவது இந்தத் தெருவுக்குள் வந்தால், ‘யார் வீட்டுக்கு சொல்கிறோம்’ என்பதை அந்தக் காவலாளியிடம் கூறினால்தான் உள்ளே அனுமதிக்கின்றனர்.

இதைப்போன்று ஈ.வெ.ரா பெரியார் சாலையில் நேரு பூங்கா சிக்னல், கே.ஜெ மருத்துவமனைக்கு அருகில் உள்ள ஈ.வெ.ரா 2-வது சந்திலும் செக்ஸ்ட் போஸ்ட் அமைக்கப்பட்டுள்ளது. இதைத் தவிர்த்து சைதாப்பேட்டை வேளாங்கண்ணி கல்லூரி செல்லும் சாலை ஆகிய இடங்களில் இதுபோன்று குடியிருப்புவாசிகள் சாலையின் நுழைவு வாயிலில் செக் போஸ்ட் அமைத்துள்ளதாக தெரிகிறது.

இது தொடர்பாக குடியிருப்புவாசிகளிடம் கேட்டபோது, பாதுகாப்பு காரணங்களுக்காக மட்டுமே இது போன்று அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT   ( 28 Comments )
  • பாலரத்னா

    யாருக்கும் சட்டத்தை தன் கையில் எடுப்பதற்கு உரிமை இல்லை. தெருவுக்கு பாதுகாப்பு வேண்டுமானால் கூர்க்கா அல்லது தனியார் செக்யூரிட்டி மூலம் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொள்ளலாம். அதை விட்டு தெருவுக்குள் நுழையவே தடை போடப்படுவது நெறியற்ற செயல். இப்படி செக் போஸ்ட் போடுபவர்கள் நாளைக்கு அந்த சாலையில் ஏற்படும் குடிநீர், மழை நீர் வடிகால் பிரச்சினை, சாலையில் ஏற்படும் பள்ளங்கள் போன்றவற்றை மாநகராட்சியை எதிர்பார்க்காமல் தங்களது செலவிலேயே சீர் செய்ய முன்வருவார்களா.

  • N
    Narasiman

    திராவிட மாடல்?...

      பிரபாகர்

      கேட் போட்டவங்கள்லாம் யாருன்னு பாத்தா...

      2

      0

 
x
News Hub
Icon