Published : 04 Jun 2022 06:32 AM
Last Updated : 04 Jun 2022 06:32 AM

சேலம் பெரியார் பல்கலை. மாணவர் அரசியல் பரப்புரைக்கான தடையை விலக்கி உத்தரவு: துணைவேந்தர் அறிவிப்பு

சேலம்: சேலம் பெரியார் பல்கலைக்கழக துறைகள் மற்றும் இணைவு பெற்ற கல்லூரிகளில் மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் அரசியல் பரப்புரைகளை மேற்கொள்ள விதிக்கப்பட்ட தடையை விலக்கி பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் உத்தரவிட்டுள்ளார்.

சேலம் பெரியார் பல்கலைக்கழக துறைகள் மற்றும் இணைவு பெற்ற கல்லூரிகளில் மாணவர்கள், பல்வேறு அமைப்புகளின் பெயரில், அரசியல் சார்ந்த பரப்புரைகளை மேற்கொள்வதற்கு முற்றிலும் தடை விதித்து, துணைவேந்தர் சார்பில் சுற்றறிக்கை வெளியிடப்பட்டிருந்தது. இதற்கு பல்வேறு மாணவர் அமைப்புகள், பொதுப் பள்ளிக்கான மாநில மேடை உள்ளிட்டவை எதிர்ப்பு தெரிவித்தன.

தடை நீக்கம்

இந்நிலையில், நேற்று பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், ‘பெரியார் பல்கலைக்கழகம் மற்றும் இணைவு பெற்ற கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் அரசியல் சார்ந்த பரப்புரை மேற்கொள்ள முற்றிலும் தடை விதிக்கப்பட்டு வெளியிடப்பட்ட சுற்றறிக்கை முழுவதுமாக விலக்கிக் கொள்ளப்படுகிறது’ என்று தெரிவித்
துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT   ( 3 Comments )
  • C
    Chandra_USA

    கல்லூரிக்குள் அரசியல் ஏன்? மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தினால் போதாதா? இது இந்திய எங்கும் பிரச்சனையையும், வன்முறையையும் தான் வளர்க்கிறது.

      C
      Chandra_USA

      இந்தியா முழுவதும் என்று சொன்னேன், கர்நாடகா இந்தியாவில் இல்லையா? நான் எந்த ஒரு குழுவையும் சுட்டி காட்டவில்லை பொதுவாக கல்விநிலையங்களில் அரசியல் தேவையில்லை என்கிறேன், உங்களுக்கு நாங்கள் செய்தால் சரி, நீ செய்தால் தவறு என்கிறீர்கள்.

      0

      0

      பிரபாகர்

      கர்நாடகாவில் பள்ளிக்குள் ஏபிவிபி செய்யும் அக்கிரமங்களின்போது தங்களுக்கு இந்த கேள்வி எழாதது ஆச்சரியமில்லை.

      0

      1

 
x
News Hub
Icon