Published : 04 Jun 2022 06:26 AM
Last Updated : 04 Jun 2022 06:26 AM
மாமல்லபுரம்: இந்தியாவுக்கான சீன நாட்டு தூதர் நேற்று முன்தினம் மாமல்லபுரம் வந்தார். அவர் பல்லவர் கால புராதன சின்னங்களை சுற்றிப் பார்த்தார். இந்தியாவுக்கான சீன நாட்டு தூரத் சின் விதாங். இவர் நேற்று முன்தினம் மாலை மாமல்லபுரம் வந்தார். அவர் பல்லவர் கால புரதான சின்னங்களை சுற்றிப் பார்த்தார். அவருடன் அந்த நாட்டு தூதரக அதிகாரிகள் 5 பேர் மாமல்லபுரம் வந்திருந்தனர்.
இவர்களை மாமல்லபுரம் சுற்றுலாத் துறை அலுவலர் ராஜாராமன் வரவேற்றார். பிறகு யுனெஸ் கோவால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட மாமல்லபுரம் கடற்கரை கோயில் வளாகத்துக்குள் நடந்து சென்று பல்லவ மன்னர்களால் வடிவக்கப்பட்ட கடற்கரை கோயிலின் தோற்றத்தை பார்த்தனர். கடற்கரை கோயிலின் கருவறைகளில் உள்ள சிவன், விஷ்ணு கோயில்கள், முகப்பில் உள்ள நந்தி சிலை ஆகியவற்றை பார்வையிட்டனர். கடற்கரை கோயில் வளாகத்தின் முன்பகுதியில் மாமல்லபுரம் துறைமுக பட்டினமாக இருந்ததற்கு சான்றான படகு துறை, அகழி பகுதிகளை பார்வையிட்டனர். அப்போது உடன் சுற்றுலா வந்த வழிகாட்டி கடற்கரை கோயில் உருவாக்கப்பட்டதன் பின்னணி உட்பட பல்வேறு தகவல்களை தூதரக்கு விளக்கினார்.
நிறைவாக கடற்கரை கோயிலின் சிற்பங்களை ரசித்து பார்த்த சீன தூதர் மற்றும் அவருடன் வந்த தூதரக அதிகாரிகள் அங்கு நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர். குறிப்பாக மாமல்லபுரம் வந்தபோது தங்கள் நாட்டு அதிபர் ஜின்பிங் நின்று புகைப்படம் எடுத்த வெண்ணை பாறை பகுதியில் நின்று சீனா தூதர் புகைப்படம் எடுத்துக் கொண்டார். சீனா நாட்டு தூதர் வருகையை முன்னிட்டு மாமல்லபுரம் கடற்கரை கோயில், ஐந்துரதம் உள்ளிட்ட முக்கிய புராதன சின்னங்களில் மாமல்லபுரம் போலீஸ் காவல் ஆய்வாளர் ருக்மாங்கதன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT