Published : 04 Jun 2022 04:52 AM
Last Updated : 04 Jun 2022 04:52 AM

சென்னை உயர் நீதிமன்றத்தில் நிரந்தர நீதிபதிகளாக 9 பேர் இன்று பதவியேற்பு

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் 9 பேர் இன்று நிரந்தர நீதிபதிகளாகப் பதவியேற்க உள்ளனர். அவர்களுக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி பதவிப்பிரமாணம் செய்து வைக்கவுள்ளார்.

குடியரசுத் தலைவர் உத்தரவு

கடந்த 2020-ம் ஆண்டு டிச.3-ம் தேதி, மாவட்ட நீதிபதிகளாகப் பணியாற்றிய ஜி.சந்திரசேகரன், வி.சிவஞானம், ஜி.இளங்கோவன், எஸ்.ஆனந்தி, எஸ்.கண்ணம்மாள், எஸ்.சத்திக்குமார் சுகுமார குரூப், கே.முரளிசங்கர், ஆர்.என்.மஞ்சுளா, டி.வி. தமிழ்ச்செல்வி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டனர்.

இவர்கள் 9 பேரையும் சென்னை உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தார். அதன்படி 9 பேருக்கும் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி இன்று பதவிப்பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.

இதில் நீதிபதிகளான கே.முரளி சங்கர், டி.வி.தமிழ்ச்செல்வி ஆகியோர் கணவன் - மனைவி என்பதும், நீதிபதிகள் எஸ்.ஆனந்தி, எஸ்.கண்ணம்மாள் ஆகியோர் அடுத்த மாதம் பணி ஓய்வு பெறவுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x