Published : 02 Jun 2014 07:45 AM
Last Updated : 02 Jun 2014 07:45 AM

மின் வாரிய இயக்குநர் உள்பட 23 அதிகாரிகள் ஒரே நாளில் ஓய்வு: 26 மேற்பார்வை பொறியாளர்களுக்கு பதவி உயர்வு

தமிழக மின் வாரிய மின் தொடர மைப்புக் கழக இயக்குநர் அக்‌ஷய் குமார், கோவை தலைமைப் பொறியாளர் தங்கவேல் உள்பட 23 உயரதிகாரிகள் ஒரே நாளில் ஓய்வு பெற்றுள்ளனர். இதைத் தொடர்ந்து 26 மேற்பார்வை பொறியாளர்களுக்கு ஒரே நேரத்தில் கூடுதல் தலைமைப் பொறியாளர்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக மின் வாரியத்தின் கட்டுப்பாட்டிலுள்ள தமிழக மின் தொடரமைப்புக் கழக இயக்குநர் அக்‌ஷய் குமார், மே மாதம் 31ம் தேதியுடன் ஓய்வு பெற்றார். அவரது இடத்தில் இன்னும் வேறு அதிகாரி நியமிக்கப்படவில்லை.

இதேபோல் மின் தொடரமைப்புக் கழக சிவில் பிரிவு தலைமைப் பொறியாளர் நரசிம்மன் கடந்த 31ம் தேதி ஓய்வு பெற்றதால், அவரது இடத்தில் உடன்குடி திட்டப்பணிகளை கவனித்த மேற்பார்வைப் பொறியா ளர் சீனிவாசன் தலைமைப் பொறி யாளராக நியமிக்கப் பட்டுள்ளார்.

மேட்டூர் அனல் மின் நிலைய மேற்பார்வைப் பொறியாளர் எஸ்.குமார், தலைமைப் பொறியா ளராக பதவி உயர்வு பெற்றுள் ளார். அவர் வடசென்னை அனல் மின் நிலைய தலைமைப் பொறியாளராக இட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். வடசென்னை விரிவாக்கம் அனல் மின் நிலைய தலைமைப் பொறியாளர் கோவை மண்டல மின் வினியோகப் பிரிவு தலைமைப் பொறியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அங்கு பணியாற்றிய தங்கவேல், கடந்த 31ம் தேதியுடன் ஓய்வு பெற்றார்.

மேட்டூர் புதிய மின் நிலைய தலைமைப் பொறியாளராக, சென்னையில் சிவில் பணிகளை கவனித்துக் கொண்டிருந்த மேற்பார்வைப் பொறியாளர் வி.எம்.ராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக மின் வாரியத்தில் பொதுவாக மேற்பார்வைப் பொறியாளர்கள், நேரடியாக தலைமைப் பொறியாளர்களாகவே பதவி உயர்வு செய்யப்படுவர். ஆனால், வழக்கத்துக்கு மாறாக இம்முறை 26 மேற்பார்வை பொறியாளர்கள், கூடுதல் தலைமைப் பொறியாளர்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.

தமிழக மின் வாரியத்தில் கடந்த 31ம் தேதியுடன், மின் தொடரமைப்புக் கழக இயக்குனர் அக்‌ஷய்குமார் உள்பட சுமார் 23 அதிகாரிகள், ஒரே நாளில் ஓய்வு பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x