Published : 01 Jun 2022 06:14 AM
Last Updated : 01 Jun 2022 06:14 AM
ராமநாதபுரம்: அதிமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஆர்.தர்மர், தனது ஒன்றியக்குழு தலைவர் பதவியை ராஜினாமா செய்ததால் தலைவர் பதவியைக் கைப்பற்ற திமுக, அதிமுகவினர் வியூகம் வகுக்கத் தொடங்கிவிட்டனர்.
முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவரும், அதிமுக ஒன்றியச் செயலாள ருமான ஆர்.தர்மர், மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் போட்டியிடுகிறார். அதனால் அவர் 11-வது வார்டு ஒன்றியக்குழு உறுப்பினர், ஒன்றியக்குழு தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார். இதனால், இந்த இரு பதவிகளும் காலியாக உள்ளன.
இன்னும் 6 மாதங்களில் ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதன்பின்னர் ஒன்றியக்குழு தலைவர் தேர்தல் நடைபெறும். தற் போது பொறுப்பு ஒன்றியக்குழுத் தலைவராக துணைத் தலைவர் கண்ணகி பொறுப் பேற்றுக் கொண்டார்.
முதுகுளத்தூர் ஒன்றியக் குழுத் தலைவர் பதவியைக் கைப்பற்றுவது யார் என்ற போட்டி திமுக, அதிமுகவின ரிடையே ஏற்பட்டுள்ளது. இதில் ஆளுங்கட்சியான திமுக ஒன்றியக்குழு தலைவர் பதவியைக் கைப்பற்ற பெரும் முயற்சி எடுத்து வருவதாகக் கூறப்படுகிறது.
முதுகுளத்தூர் தொகு தியைச் சேர்ந்த பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பனும், திமுக மாவட்டப் பொறுப்பாளரும், ராமநாதபுரம் எம்எல்ஏவு மான காதர்பாட்சா முத்து ராமலிங்கமும், தலைவர் பதவியை திமுகவினரே கைப் பற்றும் நோக்கில் பணிகளைத் தொடங்கி உள்ளனர்.
15 ஒன்றியக்குழு உறுப்பி னர்களைக் கொண்ட முது குளத்தூர் ஒன்றியத்தில் திமுக சார்பில் 4 பேர், அதிமுக சார்பில் 4 பேர், சுயேட்சைகள் 7 பேர் வெற்றிபெற்றனர். தேர்தலுக்குப் பின் சுயேட்சை வேட்பாளரான அமமுகவைச் சேர்ந்த கண்ணகி உள்ளிட்ட 3 பேர் அதிமுகவில் இணைந்தனர், அதேபோல் சுயேட்சை வேட்பாளரான லெட்சுமி உள்ளிட்ட 2 பேர் திமுகவில் இணைந்தனர். கடந்தமுறை ஒன்றியக்குழு தலைவர் தேர்தலில் திமுக போட்டியிடவில்லை.
அதிமுக சார்பில் ஆர்.தர்மரும், சுயேட்சை வேட்பாளரான (அமமுக) முருகனும் போட்டியிட்டனர். இதில் தர்மர் அதிமுக, திமுக மற்றும் சுயேட்சைகள் ஆதரவுடன் வெற்றி பெற்றார். தற்போது தர்மர் பதவியை ராஜினாமா செய்ததால், அதிமுகவுக்கு ஓர் இடம் குறைந்துள்ளது. தற்போதுள்ள நிலையில் அதிமுக, திமுக தரப்பில் தலா 6 ஒன்றியக்குழு உறுப்பினர்களும், அமமுகவில் ஒரு உறுப்பி னரும், சுயேட்சை ஒருவரும் உள்ளனர்.
இந்நிலையில், முதுகுளத் தூர் ஒன்றியக்குழு தலைவர் பதவியைக் கைப்பற்ற திமுக, அதிமுக சார்பில் இப்போதே வியூகம் வகுக்கத் தொடங்கிவிட்டனர். திமுக ஆளுங்கட்சியாக இருப்பதால் தலைவர் பதவியை எப்படியேனும் கைப்பற்றியே தீருவது என்று கூட்டல், கழித்தல் கணக்கைத் தொடங்கிவிட்டது.
அதேபோல, அதிமுகவும் தலைவர் பதவியைக் கைப்பற்றிவிட வேண்டும் என்று பணிகளைத் தொடங்கி உள்ளது. ஏற்கெனவே வகித்த பதவி கைநழுவி விடக்கூடாது என்று கட்சியினர் கருதுகின்றனர். இருப்பினும் தர்மர் ராஜிநாமா செய்த 11-வது வார்டு ஒன்றியக் குழு உறுப்பினருக்கான தேர்தல் முடிந்த பின்னர்தான் யார் தலைவர் பதவியைக் கைப் பற்றுவது என்பது தெரிய வரும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT