Published : 30 May 2022 09:28 PM
Last Updated : 30 May 2022 09:28 PM
கடலூர்: இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள், சிதம்பரம் நடராஜர் கோயில் சொத்து விபரங்கள் குறித்து ஆய்வு நடத்த வருவதற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் வரும் 7, 8 ஆகிய தேதிகளில் இந்து சமய அறநிலைத் துறை அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்யவுள்ளதாக கோயில் பொது தீட்சிதர்களுக்கு இந்து சமய அறநிலையத் துறை கடலூர் இணை ஆணையர் அலுவலகத்தில் உள்ள ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஆணையர் ஜோதி ஆகியோர் கடிதம் ஒன்று அனுப்பியிருந்தார்கள்.
அதில், நிர்வாகம் தொடர்பாக வரப்பெற்ற மனுக்கள் தொடர்பாகவும், நடராஜர் கோயிலுக்கு சொந்தமான சொத்து விபரங்கள், கட்டளைதாரர்கள், நகைகள் உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் கணக்கெடுத்து விசாரணை செய்து, ஆய்வு நடத்துவதற்கு தீட்சிதர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தனர்.
இந்த நிலையில், இன்று (திங்கள்கிழமை) கோயில் பொது தீட்சிதர்கள், “உச்ச நீதிமன்ற தீர்ப்பு உள்ளது. இது எங்களை கட்டுப்படுத்தாது” என்று கூறி இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் கோவியிலில் ஆய்வு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னையில் உள்ள இந்து அறநிலையத் துறை ஆணையருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
அந்தக் கடிதத்தின் நகல்களை குடியரசுத் தலைவர், பிரதமர், தமிழக முதல்வர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பலருக்கு அனுப்பியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT