Last Updated : 15 May, 2016 12:43 PM

 

Published : 15 May 2016 12:43 PM
Last Updated : 15 May 2016 12:43 PM

நூற்றாண்டை கடந்த பெரியகுளம் அரசு மருத்துவமனை: இதுவரை 5 கோடி பேருக்கு மேல் சிகிச்சையளித்ததோடு தேசிய தரக்கட்டுப்பாடு சான்றும் பெற்றுள்ளது

பெரியகுளம் தலைமை அரசு மருத்துவமனை 100 ஆண்டுகளை கடந்து 101-வது ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ளதோடு, 5 கோடி பேருக்கு மேல் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் ஏராளமான தனியார் மருத்துவமனைகள் இருந் தாலும், ஏழை, எளியோர் சிகிச்சை பெற அரசு மருத்துவமனைகளையே நாடுகின்றனர். பெரியகுளத்தில் அமைந்துள்ள அரசு தலைமை மருத் துவமனைக்கு தினமும் சராசரியாக 1,300 புற நோயாளிகள் வருகின்றனர். நோயின் தன்மைக்கேற்ப 300 பேர் உள்நோயாளிகளாக அனுமதிக் கப்படுகின்றனர். இந்த மருத்துவ மனை கடந்த 10.4.1916-ம் ஆண்டில் அப்போதைய சென்னை மாகாண ஆளுநர் பென்லாண்ட் என்பவரால் திறந்து வைக்கப்பட்டது. 1922-ம் ஆண்டு பிரிட்டன் இளவரசர் வேல்ஸ் என்பவர் பெயருடன் இணைக்கப் பட்டு பிரின்ஸ் ஆப் வேல்ஸ் மருத்துவமனை எனப் பெயரிடப் பட்டது. (தற்போது அரசு தலைமை மருத்துவமனை என்ற பெயரில் செயல்படுகிறது) அன்றைய காலக் கட்டத்தில் ஒரு மருத்துவர், 40 படுக் கைகள், ஒரு அறுவை சிசிச்சை அரங்கம் இருந்துள்ளது. 1960-ம் ஆண்டில் இங்கு எக்ஸ்ரே பிரிவு மற்றும் கூடுதலாக 20 படுக்கைகள் கொண்ட பிரிவு தொடங்கப்பட்டது. தற்போது அது ஆண்கள் அறுவை சிகிச்சை பிரிவாக மாற்றப்பட்டுள் ளது.

1977-ம் ஆண்டில் குழந்தைகள், மகப்பேறு, சித்தா, எலும்புமுறிவு சிகிச்சைப் பிரிவும், 1980-ம் ஆண்டு அவசர சிகிச்சை பிரிவும், 1989-ம் ஆண்டில் ரத்த வங்கி, 1998-ம் ஆண்டில் நவீன கண் சிகிச்சை பிரிவு, 2004-ம் ஆண்டில் நவீன சமையல றைக் கட்டிடமும் கட்டப்பட்டன. 2006-ம் ஆண்டில் புறநோயாளிகள் கட்டிடம் கட்டப்பட்டது. இது மருத்துவ கிடங்காக மாற்றப்பட் டுள்ளது. 2008-ம் ஆண்டு புதிய வெளிநோயாளிகள் பிரிவும், கடந்த ஆண்டு அறுவைச் சிகிச்சை பிரிவு மற்றும் பல புதிய வார்டுகளும் கட்டப்பட்டுள்ளன. கடந்த மாதம் புதிதாக செவிலியர் பயிற்சிக் கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, ஆண்டிபட்டி அருகே அரசு மருத் துவக் கல்லூரி மருத்துவமனை தொடங்கப்பட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தாலும் 100 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்த அரசு தலைமை மருத்து மனைக்கு இன்று வரை அதிகளவில் நோயாளிகள் வந்து கொண்டுதான் இருக்கின்றனர்.

இதுகுறித்து ‘தி இந்து’விடம் மாவட்ட மருத்துவ இணை இயக் குநர் ஏ. சையது சுல்தான் இப்ராகீம் கூறியதாவது: 101-வது ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ள பெரியகுளம் அரசு தலைமை மருத்துவமனையின் 100-வது ஆண்டின் நிறைவை யொட்டி எளியமுறையில் நிகழ்ச்சி கள் நடத்தப்பட்டு மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்த மருத்துவமனை யில் இதுவரை 5 கோடி பேருக்கு மேல் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. பல லட்சம் பேருக்கு அறுவை சிகிச்சையும் நடைபெற்றுள்ளது.

தேனி, திண்டுக்கல் மாவட்டத்தில் இந்த அரசு மருத்துவமனையே மிகவும் பழைமை வாய்ந்தது. குறைந்த வசதிகளுடன் தொடங் கப்பட்ட மருத்துவமனை இன்று 260 படுக்கைள் கொண்ட அனைத்து நவீன வசதிகளும் கூடிய மருத்துவ மனையாக திகழ்கிறது. விரைவில் டயாலிசிஸ் பிரிவும் வர உள்ளது.

இந்திய அளவில் மிகவும் அதிக மான கட்டுப்பாடுகள், விதிமுறை கள் கொண்ட தேசிய தரக்கட்டுப் பாடு சான்று நிறுவனத்திடம் இருந்து, கடந்த ஆண்டு இம் மருத்துவமனைக்கு தேசிய தரக் கட்டுப்பாடு சான்று கிடைத்துள்ளது, நூற்றாண்டு கண்ட அரசு மருத் துவமனைக்கு மேலும் பெருமை சேர்த்துள்ளது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x