Published : 02 Jun 2014 02:45 PM
Last Updated : 02 Jun 2014 02:45 PM

தேர்தலில் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையை பின்பற்ற வலியுறுத்தி திமுக தீர்மானம்

தேர்தலில் போட்டியிட்டு தோற்ற திமுக வேட்பாளர்களும் பொறுப் பாளர்களும் தேர்தல் தோல்விக் கான காரணங்களை அறிக்கை யாக தயாரித்து திமுக தலைவர் கருணாநிதியிடம் வரும் 15-ம் தேதிக்குள் நேரில் அளிக்க வேண் டும். அவற்றின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப் படும் என்று திமுக உயர்நிலை செயல்திட்டக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 39 இடங்களிலும், திமுக 34 இடங் களிலும் போட்டியிட்டு தோற்றது. உள்கட்சிப் பிரச்சினை, அழகிரி - ஸ்டாலின் மோதல், வேட்பாளர் தேர்வு குளறுபடி ஆகியவை தேர்தல் தோல்விக்கு முக்கிய காரணங்களாகக் கூறப்பட்டன. இதுகுறித்து ஆலோசிக்கும் வகை யில் திமுக உயர்நிலை செயல் திட்டக்குழுக் கூட்டம் கட்சித் தலைவர் கருணாநிதி தலைமை யில் சென்னை அண்ணா அறிவால யத்தில் திங்கள்கிழமை நடந்தது. 24 உறுப்பினர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

அதிமுக தில்லுமுல்லு

தேர்தல் பணிகள் தொடங்கியது முதலாகவே தமிழகத்தில் ஆளும் கட்சியான அதிமுக, தேர்தல் ஆணையத்துடன் சேர்ந்து தில்லு முல்லுகளில் ஈடுபட்டது. அதிமுக வினர் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்க ஏதுவாக, தேர்தல் ஆணையம் தன்னிச்சையாக 144 தடை உத்தரவு பிறப்பித்து, செயற்கை பீதியைக் கிளப்பி விட்டது. பின்னர், வாக்காளர்களுக் குப் பணம் கொடுப்பதை தடுக்க முடியவில்லை என்று தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரியே முதலைக் கண்ணீருடன் வாக்குமூலம் வழங்கினார். காவல் துறையும் தேர்தல் ஆணையமும் ஆளும் கட்சியின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கு அனுசரணையாக, பாரபட்சமான செயல்பாடுகளை மேற்கொண் டதை இக்கூட்டம் கண்டிக்கிறது.

தேர்தல் முறையை மாற்ற வேண்டும்

உலகின் பல நாடுகளிலும் விகிதாச் சாரப் பிரதிநிதித்துவ முறை (Proportional Representation) தான் கடைப்பிடிக்கப்படுகிறது. தேர்த லில் கட்சிகளின் வாக்கு வீதத்துக்கு ஏற்ப, அந்த கட்சிகளுக்குப் பிரதி நிதித்துவம் கிடைக்கும். உறுப்பினர் களை கட்சியே தேர்வு செய்து நியமிக்கும். இந்த முறையை அண்ணா திரும்பத் திரும்ப வலியுறுத்தினார். இதுகுறித்து உரிய நடவடிக்கைகள் மேற் கொள்ள மத்திய அரசையும், தேர்தல் ஆணையத்தையும் திமுக கேட்டுக்கொள்கிறது.

‘மாவட்டம்’ எல்லை மாறுகிறது

கட்சிப் பணிகளை விரைவாக, விரி வாக ஆற்றவும், அனைத்துப் பகுதி களையும் நேரடியான சிறப்புக் கவனத்தில் கொள்வதற்கு ஏற்ற வாறும் தற்போதுள்ள மாவட்டக் கழக எல்லைகளை மாற்றியமைக் கலாம். இதுகுறித்து கட்சித் தலை மைக்குப் பரிந்துரை செய்ய குழு அமைக்கப்படுகிறது. இக்குழுவின் பரிந்துரைகள் மீது, தலைமைக் கழகம் முடிவெடுத்து, முறைப்படி கட்சி அமைப்பு விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளலாம்.

அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை

தேர்தலில் போட்டியிட்ட திமுக வேட்பாளர்களும், நாடாளுமன்றத் தொகுதி தலைமைக் கழக பொறுப் பாளர்களும் நாடாளுமன்றத் தேர்தல் பற்றிய நடைமுறைகளில் தங்களுடைய அனுபவங்களைப் பற்றியும், அவர்கள் சந்தித்த பல் வேறு நிலைமைகளைப் பற்றியும், தோல்விக்கான காரணங்கள் குறித் தும், விருப்பு வெறுப்பு அகற்றி, நடுநிலையோடு நன்கு சிந்தித்து அலசி ஆராய்ந்து, வரும் 15-ம் தேதிக்குள் தங்கள் அறிக்கையை கட்சித் தலைவர் கருணாநிதியிடம் நேரில் வந்து அளிக்க வேண்டும். இந்த அறிக்கைகளின் அடிப்படை யில் கட்சித் தலைமை உரிய நடவடிக்கை எடுக்கும்.

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

91-வது பிறந்தநாள் கொண் டாடும் கருணாநிதிக்கு வாழ்த்துக் கள். நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுக்கு வாக்களித்த 96 லட்சத்து 36 ஆயிரத்து 430 வாக் காளர்களுக்கு நன்றி, வணக்கம் என்றும் தீர்மானத்தில் கூறப் பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x