Published : 28 May 2022 03:10 PM
Last Updated : 28 May 2022 03:10 PM
சென்னை: நீட் தேர்வு தொடர்பான திமுகவின் அரசியலுக்கு தமிழக மாணவர்களிடம் நேரமில்லை என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
2022-ம் நீட் தேர்வு எழுத அதிக அளவு மாணவர்கள் விண்ணப்பித்துள்ள மாநிலங்களில் தமிழகம் 3-வது இடத்தில் உள்ளது. இதைக் குறிப்பிட்டு தமிழக பாஜக தலைவர் அண்ணாலை கருத்து ஒன்றை ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.
Students respond to @CMOTamilnadu’s NEET plea by enrolling in record numbers for this year's examination.
Students from TN have no time for petty politics played by the @arivalayam Govt. pic.twitter.com/w47jr7etnf— K.Annamalai (@annamalai_k) May 28, 2022
அந்தப் பதிவில், "நீட் தேர்வுக்கு அதிக அளவு விண்ணப்பித்து முதல்வருக்கு தமிழக மாணவர்கள் பதில் அளித்துள்ளனர். திமுகவின் அரசியலுக்கு தமிழக மாணவர்களிடம் நேரமில்லை" என்று தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டுவருகிறது. இது தொடர்பான மசோதா குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் சில நாட்களுக்கு முன்ப சென்னையில் பிரதமர் மோடி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT