Published : 27 May 2022 09:49 PM
Last Updated : 27 May 2022 09:49 PM
தாம்பரம்: “கிராம நிர்வாக அலுவலர்களுக்கு நில அளவை செய்ய பயிற்சியளிக்கபடுகிறது. இன்னும் ஆறு மாதங்களில் நில அளவையர்கள் பற்றாக்குறை சரி செய்யபடும்” என்று தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ராமசந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னையை அடுத்துள்ள தாம்பரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் துறை அமைச்சர் கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அந்த அலுவலகத்தில் நடக்கும் சில தவறுகள் நடப்பதாகவும்,மக்கள் அலைகழிக்கப்படுவது தொடர்பான குற்றச்சாட்டுக்கள் குறித்து அதிகாரிகளிடம் விசாரித்தார். பின்னர், இதுபோன்ற தவறுகள் இனிமேல் நடக்கக்கூடாது என்று கண்டிப்புடன் தெரிவித்தார்.
பின்னர் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ராமசந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "தாலுகா அலுவலகங்களில் மக்களுக்கான சேவைகள் தாமதமாகாமல் விரைந்து கிடைத்திட வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டதன் பேரில் தாம்பரம் வட்டாட்சியர் அலுவலகத்தின் ஒவ்வொரு பகுதியாக அனைத்து பணிகளியும் ஆய்வு செய்யப்படுகிறது. இதில் தவறு செய்துள்ள அதிகாரிகள் கண்டிக்கப்படுகின்றனர்.
அனைத்து மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்ட கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கபட்டுள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் தாலுகா வாரியாக ஆய்வு செய்ய முதல்வர் அறிவிருத்தியுள்ளார்.
தாலுகா அலுவலகங்களில் தரகர்கள் ஒழிக்கபட வேண்டும் என்ற கொள்கையோடு இந்த கண்கானிப்பு பணிகள் தீவிரபடுத்தபடுத்தப்பட்டுள்ளது. மேலும் 8000 நில அளவையர்கள் இருக்க வேண்டிய இடத்தில் கடந்த 10 ஆண்டுகளாக 4000 பேர் மட்டுமே இருப்பதால் தற்போது கிராம நிர்வாக அலுவலர்களும் நில அளவை செய்ய நீதிமன்றத்தில் உத்தரவு பெறபட்டு அவர்களுக்கும் பயிற்சியளிக்கபட்டு வருகிறது.
எனவே, 6 மாதத்தில் நில அளவையர் பற்றாக்குறை சரிசெய்யபடும் .தாம்பரம் தாலுகாவில் விரைவில் கூடுதல் பணியாளர்கள் நியமிக்கபடுவார்கள்” என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT