Published : 27 May 2022 03:58 PM
Last Updated : 27 May 2022 03:58 PM
சென்னை: 2023-ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தில் ருபெல்லா நோயை முழுவதும் ஒழிக்க தமிழக பொது சுகாதாரத் துறை திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான திட்டங்களை வகுக்க சுகாதாரத் துறை அதிகாரகளுக்கான பயிரங்கலம் சென்னையில் நடைபெற்றது.
குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு 11 வகையான தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இதன்படி மஞ்சள் காமாலை, தட்டம்மை, போலியோ, ருபெல்லா, கக்குவான் இருமல், காசநோய், தொண்டை அடைப்பான், வயிற்றுப் போக்கு உள்ளிட்ட நோய்களில் இருந்து பாதுகாக்கும் வகையில் தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன.
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் 9.31 லட்சம் குழந்தைகள் மற்றும் 10.21 லட்சம் கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. கடந்த 3 ஆண்டுகளாக 99%, 97% மற்றும் 97% தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன.
4-வது தேசிய சுகாதார மற்றும் குடும்ப நல ஆய்வில் முடிவில் தமிழகத்தில் முழுமையாக தடுப்பூசி பெற்ற குழந்தைகளின் சதவீதம் 76.1 ஆக இருந்தது. 4-வது தேசிய சுகாதார மற்றும் குடும்ப நல ஆய்வில் முடிவில் இது 90.4 சதவீதமாக உள்ளது.
இந்நிலையில், தடுப்பூசியால் தடுக்க கூடிய நோய் பாதிப்பை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவும், 2023-ம் ஆண்டுக்குள் தட்டம்மை இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க தமிழக சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது. இது குறித்து அனைத்து மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குனர்களுக்கான 2 நாள் பயிலரங்கம் சென்னையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் உலக சுகாதார நிறுவனம், மத்திய, மாநில அரசுகளை சுகாதாரத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில், தமிழகத்தில் உள்ள தடுப்பூசி திட்டத்தின் செயல்பாடு எந்த நிலையில் உள்ளது, நகர்புறத்தில் தடுப்பூசி செலுத்திவதில் உள்ள சவால்கள், கரோனா காலத்தில் ஏற்பட்ட தொய்வை எப்படி சரி செய்வது, பள்ளிகளுக்குச் சென்று தடுப்பூசி செலுத்துவது உள்ளிட்டவை தொடர்பாக விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.
கரோனா தொற்று காலத்தில் முறையாக தடுப்பூசி செலுத்தாத காரணத்தால் பல நாடுகளில் ருபெல்லா நோய் பாதிப்பு அதிகரித்து வருவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்து இருந்தது.
இந்நிலையில், தமிழகத்தில் 2023 ஆண்டுக்குள் தட்டம்மை, ருபெல்லா இல்லாத மாற்றுவதற்கான செயல் திட்டம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. குறிப்பாக, ருபெல்லா பாதிப்பை எப்படி கண்டறிவது, தற்போது பல நாடுகளில் ருபெல்லா தடுப்பூசியின் செலுத்தப்பட்டுள்ள நிலை ஆகியவை குறித்து உலக சுகாதார நிறுவனம் அதிகாரிகள் தங்களின் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்த இந்தத் தடுப்பூசி திட்டங்களின் செயல்பாடுகளை தமிழகத்தில் எவ்வாறு அதிகரிக்க வேண்டும். கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள ஒருங்கிணைப்பு அதிகாரியை நியமிப்பது, இதில் உள்ள சவால்கள், புள்ளி விவரம் சேகரித்தல் தொடர்பான விவாதிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தை அடிப்படையாக ஒரு செயல் திட்டம் தயாரிக்கப்பட்டு தடுப்பூசி திட்டங்கள் மற்றும் ருபெல்லா நோயை முற்றிலும் தடுப்பது தொடர்பான பணிகளை தமிழக பொது சுகாதாரத் துறை மேற்கொள்ளும் என்று பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment