Published : 25 May 2016 09:05 AM
Last Updated : 25 May 2016 09:05 AM
தமிழக முதல்வர் ஜெயலலிதா தமிழகத்தில் சிறு, குறு விவசாயி கள் 31.03.2016 வரை கூட்டுறவு வங்கிகளிடம் இருந்து பெற்ற பயிர் கடன், மத்திய மற்றும் நீண்டகால கடன் அனைத்தையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து விவசாய சங்கப் பிரதிநிதிகள் கூறியதாவது:
ராஜா சிதம்பரம் (தமிழக விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர்):
விவசாய கடனை தள்ளு படி செய்த தமிழக அரசின் செயல்பாட்டை வரவேற்கிறோம். அதே நேரத்தில் வறட்சிகாலத் திலும் மீண்டும் கடன் பெற வேண் டும் என்பதற்காக ஏராளமான விவ சாயிகள் தாங்கள் வாங்கிய கடன் களை, வேறு இடங்களில் கடனைப் பெற்று திரும்பச் செலுத்தி யுள்ளனர். அவர்களுக்கு எந்த சலுகையும் அறிவிக்கப்பட வில்லை. சிறு, குறு விவசாயிகள் பாகுபாடு இல்லாமல் அனைத்து விவசாயிகளின் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.
மேலும், மத்திய கால கடன்கள், நீண்ட கால கடன்கள் பெருமளவில் கூட்டுறவு வங்கிகளில் கடந்த சில ஆண்டுகளாக வழங்கப்பட வில்லை. இவையும் தற்போது தள்ளுபடி அறிவிப்பில் சேர்க்கப் பட்டுள்ளது. இந்தக் கடன்களை வாங்கியவர்கள் யார் என்ற பட்டிய லையும் தமிழக அரசு வெளியிட வேண்டும்.
புலியூர் அ.நாகராஜன் (தமாகா விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர்):
கூட்டுறவு வங்கிகளில் கடன் கிடைக்காத விவசாயிகள் தேசியமயமாக்கப்பட்ட வங்கி களில்தான் நிலம், நகைகள், டிராக் டர் உள்ளிட்டவைகளை அடமானம் வைத்து ஏறத்தாழ ரூ.85 ஆயிரம் கோடி கடன் பெற்றுள்ளனர். ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி கடன்களை தள்ளுபடி செய்த தைப்போன்று தமிழக அரசும் கடன் களை தள்ளுபடி செய்ய வேண் டும்.
மகாதானபுரம் வி.ராஜாராம் (காவிரி நீர்ப்பாசன விவசாயிகள் நலச் சங்கத் தலைவர்):
தமிழகத் தில் பாகுபாடு இல்லாமல் அனைத்து விவசாயிகளின் கடன் களையும், தேசியமய வங்கி கடன் களையும் தள்ளுபடி செய்ய வேண் டும்.
வெ.ஜீவக்குமார் (தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர் சங்க தஞ்சாவூர் மாவட்ட துணைத் தலைவர்):
தமிழக அரசின் அறி விப்பு வரவேற்கத்தக்கது. இயற்கை சீற்றத்தால் விவசாயம் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகி றது. இது சிறு, குறு விவசாயிகள் மட்டுமன்றி அனைத்து விவசாயி களையும் பாதித்துள்ளது. எனவே, கடன் தள்ளுபடியை பாகுபாடின்றி அனைத்து விவசாயிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும். கூட்டுறவு சங்கங்களில் புதிய உறுப்பினர் களுக்கும் கடன் வழங்க வேண்டும். நகைக்கு கடன் வழங்குவதற்கு காட்டும் முக்கியத்துவத்தை நிலத் துக்கு கடன் வழங்குவதிலும் காட்ட வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT