Published : 03 Jun 2014 09:21 AM
Last Updated : 03 Jun 2014 09:21 AM
தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் பணியாற்றி வரும் பயிற்சி மருத்துவர்கள் பயிற்சி கால ஊதிய உயர்வு கேட்டு கருப்புபட்டை அணிந்து திங்கள்கிழமை பணிக்கு சென்றனர். ஒரு வாரத்திற்குள் கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்த கட்டமாக கல்லூரிகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, மதுரை, நெல்லை, கோவை, தூத்துக்குடி, தஞ்சாவூர் ஆகிய 7 இடங்களில் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் சுமார் 3,500 பயிற்சி மருத்துவர்கள் மற்றும் முதுநிலை மாணவர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
தற்போது அளித்துவரும் பயிற்சி கால ஊதியம் போதவில்லை. இதை உயர்த்தித் தர வேண்டுமெனக் கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின் றனர். சமீபத்தில் தேர்தல் நடந்த தால், போராட்டங்கள் நிறுத்தப் பட்டு இருந்தன. இந்நிலையில், கோரிக்கையை நிறைவேற்றும் வரையில் மீண்டும் தொடர் போராட்டங்களை நடத்த முடிவு செய்துள்ளனர்.
முதல் நாளான திங்கள்கிழமை காலையில் சென்னையில் அரசு பொது மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் பணிக்கு வந்த பயிற்சி மருத்துவர்கள் கருப்பு பட்டை அணிந்து சென்றனர்.
இது தொடர்பாக தமிழ்நாடு பயிற்சி மருத்துவர்கள் மற்றும் முதுநிலை மருத்துவ மாணவர் கூட்டமைப்பு செயலாளர் கார்த்திகேயன் கூறியதாவது:
தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் 3,500 பயிற்சி மருத்துவர்கள் மற்றும் முதுநிலை மாணவர்கள் உள்ளனர். பயிற்சி கால ஊதியமாக இளநிலை மருத் துவர்களுக்கு ரூ.8,200, முதுநிலை மாணவர்களுக்கு ரூ.17,400 வழங்கப்பட்டு வருகிறது. மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும்போது இது மிகவும் குறைவாகும். குறிப்பாக டெல்லியில் முதுநிலை மாணவர்களுக்கு ரூ.71,530 வழங் கப்படுகிறது. எனவே இளநிலை பயிற்சி மருத்துவருக்கு ரூ.15,000, முதுநிலை பயிற்சி மருத்துவர் களுக்கு ரூ.43,500 பயிற்சி கால ஊதியமாக வழங்கக் கோரி கடந்த பிப்ரவரி மாதம் முதல் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறோம்.
எங்களின் கோரிக்கையை தமிழக அரசிடம் தெரிவித்துள் ளோம். அதை நிறைவேற்றுவதா கக் கூறி, தற்போது 2 மாதங்களுக் கும் மேலாகிவிட்டது. இன்னும் நிறைவேற்றவில்லை. அரசின் இந்த போக்கை கண்டித்தும், பயிற்சி கால ஊதியத்தை உடனடியாக உயர்த்தி வழங்கக் கோரியும் மீண்டும் தொடர் போராட்டம் நடத்தவுள்ளோம்.
முதல் நாளான திங்கள்கிழமை கருப்புபட்டை அணிந்து பணிக்கு சென்றுள்ளோம். வரும் வெள்ளிக்கிழமைக்குள் எங்கள் கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், மருத்துவக் கல்லூரிகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவோம். தொடர்ந்து எங்களது கோரிக்கை புறக்கணிக்கப்பட்டால் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவும் தயங்க மாட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT