Published : 26 May 2022 06:18 AM
Last Updated : 26 May 2022 06:18 AM
தேனி: மதுரையில் இருந்து தேனி வரையிலான ரயில் திட்டத்தை பிரதமர் மோடி இன்று மாலை தொடங்கிவைக்க உள்ளார். இதைத் தொடர்ந்து நாளை முதல் பயணிகள் ரயில் தினமும் இயக் கப்பட உள்ளது.
இந்திய ஏலக்காய்களின் 70 சதவீதம் கேரள-தமிழக எல்லை யான இடுக்கி மாவட்டத்திலேயே விளைகிறது. இப்பகுதி ஏலக் காய்கள் உலகளவில் சந்தைப் படுத்தப்படுகின்றன. தொடக்கத்தில் இவற்றை மலைப் பகுதியில் இருந்து கொண்டுவருவது பெரும் சவாலாக இருந்தது. இதை யடுத்து குரங்கணி பகுதிகளில் ஆங்கிலேயே அரசு அந்தக் காலத்திலேயே வின்ச் அமைத் தது.
மேலும், தென்னிந்திய ரயில்வே கம்பெனி 1926-ம் ஆண்டு ஜூலையில் போடியில் இருந்து மதுரை வரை குறுகிய ரயில்பாதைத் திட்டத்தை தொடங்கியது. ரூ.52.27 லட்சம் செலவில் முடிக்கப்பட்டது.
1928 நவம்பர் 20-ம் தேதி ரயில் சேவை தொடங்கியது.
1970-ல் இரண்டு பயணிகள் ரயில்கள் எதிரெதிர் மார்க்கமாக இயக்கப்பட்டு 1980-ம் ஆண்டில் ஒன்றாகக் குறைக்கப்பட்டது.
பின்னர், அகல ரயில்பாதைப் பணிக்காக இந்த ரயில் 2010 ஆண்டு டிசம்பர் 31-ல் நிறுத்தப்பட்டு 2011-ல் பணிகள் தொடங்கின. இருப்பினும் குறைவான நிதி ஒதுக்கீடு, கரோனா உள்ளிட்ட காரணங்களால் பெரும் தாமதம் ஏற்பட்டது.
12 ஆண்டுகள் கடந்த நிலையில் இன்று (வியாழன்) இந்த வழித்தடச் சேவையை பிரதமர் மோடி சென்னையில் இருந்து காணொலி மூலம் தொடங்கிவைக்கிறார். 27-ம் தேதி (வெள்ளி) முதல் முன்பதிவற்ற பயணிகள் ரயில் இயக்கப்பட உள்ளது.
காலை 8.30 மணிக்கு மதுரையில் இருந்தும் மாலை 6.15-க்கு தேனியில் இருந்தும் புறப்படும் வகையில் இந்த ரயில் இயக்கப்படவிருக்கிறது.
மதுரையில் இருந்து தேனிக்கு 45 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப் பட்டுள்ளது. பல ஆண்டுகளுக்குப் பிறகு ரயில் இயக்கப்படுவது தேனி மாவட்ட மக்களை மகிழ்ச் சியில் ஆழ்த்தி உள்ளது. இது குறித்து திண்டுக்கல்-குமுளி அகல ரயில்பாதை திட்டப் போராட்டக் குழுத் தலைவர் ஆர்.சங்கர நாராயணன் கூறுகையில், 11 ஆண்டுகளுக்குப் பிறகு தேனிக்கு ரயில் வசதி கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. விரைவில் போடி வரை ரயிலை இயக்க வேண்டும். திண்டுக்கல்-லோயர் கேம்ப் ரயில்பாதை திட்டத்தையும் செயல்படுத்த வேண்டும் என்றார்.
ரயில் பயனர்கள் ஆலோசனைக் குழு உறுப்பினர் கேஎஸ்கே.நடேசன் கூறுகையில், தேனி மாவட்டத்தில் இருந்து தினமும் சுமார் 3 ஆயிரம் பேருக்கு மேல் மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக சென்னை செல்கின்றனர். எனவே, சென் னைக்கு தினமும் ரயில் இயக்க வேண்டும், என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT