Published : 25 May 2022 03:32 PM
Last Updated : 25 May 2022 03:32 PM
சென்னை: தமிழகத்தில் கூடுதலாக போக்குவரத்து காவலர்கள் நியமிக்கபடவேண்டும் என்று தாம்பரம் காவல் ஆணையர் ரவி கூறியுள்ளார்.
தாம்பரம் காவல் ஆணையரகத்திற்குட்பட்ட குரோம்பேட்டையில் முதன் முதலாக அமைக்கபட்டுள்ள போக்குவரத்து எல்இடி
சிக்னலை தாம்பரம் காவல் ஆணையர் ரவி இன்று திறந்து வைத்தார். மேலும் வாகன ஓட்டிகளுக்கு இனிப்புகள் கொடுத்து, போக்குவரத்து விதிமுறைகள் குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்து பத்தாயிரம் காவலர்கள் உள்ளனர் ,இந்நிலையில் போக்குவரத்து காவலர்கள் பொருத்தவரை 12,000 பேர் மட்டுமே உள்ளனர். எனவே கூடுதலாக போக்குவரத்து காவலர்கள் நியமிக்கப்பட வேண்டும்.
போக்குவரத்து துறைக்கு 40,000 காவலர்களும் ,குற்ற தடுப்பு பிரிவுக்கு 40,000 காவலர்களும் ,மீதவுள்ளவர்களை சட்ட ஒழுங்கு பணிகளுக்காக ஒதுக்கபடவேண்டும். இவ்வாறு செய்தால் சாலையில் நடக்கும் குற்றங்கள் தடுக்கப்படும் என்றார்
குரோம்பேட்டையில் முதல் முறையாக எல்இடி சிக்னல் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அனைத்து பகுதிகளுக்கும் இது விரிவு படுத்தப்படும். இந்த சிக்னல் வாகன ஓட்டிகளுக்கு எளிதில் கண்ணில் தெரியும்படி இருக்கும் என்றார்.
மேலும் தாம்பரம் காவல் ஆணையரக பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்கள் குறித்து ஆய்வு செய்து முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் நவீன கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment