Published : 24 May 2022 01:38 PM
Last Updated : 24 May 2022 01:38 PM
சென்னை: சென்னையில் கடந்த 20 நாட்களில் 18 கொலைகள் நடந்துள்ளதாக முன்னாள் முதல்வரும், எதிரக்கட்சித் தலைவருமாகிய எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, "சென்னையில் கடந்த 20 நாட்களில் மட்டும் 18 கொலைகள் நடந்துள்ளதாக செய்திகள் வருகின்றன. இதுபோன்ற நிகழ்வுகளால் தலைநகர் கொலைநகராக மாறி, சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து மக்களின் பாதுகாப்பு கேள்விகுறியாகி இருக்கிறது.
காவல் துறையை தன்வசம் வைத்திருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், சட்டம் - ஒழுங்கை சீர்ப்படுத்தாமல் பத்திரிகைகளின் கருத்துகளை முடக்குவதிலே முழு முயற்சியுடன் இருப்பதால், தமிழ்நாட்டின் எதிர்காலம் குறித்த அச்சம் ஏற்படுகிறது" என்று தெரிவித்துள்ளார்.
சென்னையில் கடந்த
20 நாட்களில் மட்டும்
18 கொலைகள் நடந்துள்ளதாக செய்திகள் வருகின்றன,
இது போன்ற நிகழ்வுகளால் தலைநகர் கொலைநகராக மாறி,சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து மக்களின் பாதுகாப்பு கேள்விகுறியாகி இருக்கிறது,1/2
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT