Last Updated : 22 May, 2022 05:22 PM

39  

Published : 22 May 2022 05:22 PM
Last Updated : 22 May 2022 05:22 PM

'72 மணி நேரத்தில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்காவிட்டால்..’ - அரசுக்கு அண்ணாமலை எச்சரிக்கை

சென்னை: "திமுக அறிவித்தபடி பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும். சமையல் எரிவாயு விலையையும் உருளைக்கு ரூ.100 குறைக்க வேண்டும். இல்லாவிட்டால், கோட்டையை முற்றுகையிடுவோம்" என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

ஜெய்ப்பூர் பாஜக நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு சென்னை திரும்பிய பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் "மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை மீண்டும் குறைந்துள்ளது. ஒரு பக்கம் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து கொண்டே இருந்தாலும் கூட பிரதமர் மோடி விலையை குறைத்து இருக்கிறார். திமுக அரசு செயல் தன்மை இல்லாத அரசு. தேர்தல் அறிக்கையில் கூறியதை செய்யாமல் உள்ளது. அரசியல் லாபத்திற்காக தேர்தல் அறிக்கையில் பெட்ரோல். டீசல் விலையை திமுக அரசு குறைப்பதாகக் கூறியுள்ளது.

72 மணி நேரத்திற்குள் கொடுத்த வாக்குறுதி படி பெட்ரோல் டீசல் விலையை 5 ரூபாய் குறைக்க வேண்டும் சமையல் எரிவாயு விலையை 100 ரூபாய் குறைக்க வேண்டும் இல்லை என்றால் பாஜக கோட்டையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடும் . 72 மணி நேரத்திற்குள் சொன்னத்தை செய்யவில்லை என்றால் கோட்டையை பாஜக முற்றுகையிட்டு போராட்டம் நடத்தும்.

காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது மன்மோகன்சிங் ஒவ்வொருமுறையும் அனைத்து மாநில முதல்வர்களை கேட்டு தான் பெட்ரோல் விலையை ஏற்றினாரா, இறக்கினாரா?

நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சொல்வதைப் பார்க்கும்போது பிரதமர் நரேந்திர மோடி அலுவலகத்தை விட்டு வெளியே வர வேண்டுமென்றால் கூட இவர்களிடம் அனுமதி கேட்க வேண்டும் போல! காலையில் ராஜீவ் காந்தி படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்துகிறார்.. மாலையில் அவர் இறப்புக்கு காரணமானவர்களை விடுவிப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்கிறார்கள். நடிகர் வடிவேல் போல முதல்வர் செயல்படுகிறார்.

முதல்வர் பேரறிவாளனை ஆரத்தழுவி வரவேற்றது குறித்து இந்தியாவே அதிர்ச்சியில் இருக்கிறது.. இது போன்று முதல்வர் நடந்து கொள்வதால் தான் தமிழ் நாட்டில் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. நடுரோட்டில் பயமின்றி ஒருவரை வெட்டுகிறார்கள்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் உள்ள மற்ற குற்றவாளிகளை மத்திய அரசு விடுவிக்காது. பேரறிவாளன் வழக்கில் கொடுத்த தீர்ப்பு மற்றவர்களுக்கு பொருந்தாது என்பதை முதல்வர் தெரிந்துகொள்ள வேண்டும்.

ஆர்டிகிள் 6-ஐ பயன்படுத்தி நம் மீனவர்களை மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும். பாஜகவின் நிலைப்பாடு கச்சத்தீவை மீட்க வேண்டும் என்பது தான்.

நான் பட்டினப்பிரவேச நிகழ்ச்சியில் பங்கேற்கின்றேன். மீண்டும் இடையூறு செய்தால் நானே பல்லக்கை தூக்குவேன்.” இவ்வாறு அவர் கூறினார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x