Published : 22 May 2022 04:00 AM
Last Updated : 22 May 2022 04:00 AM
ஒருங்கிணைந்த வேலூர் மாவட் டத்தில் 185 தேர்வுக்கூடங்களில் நடைபெற்ற குரூப்-2 தேர்வில் 7,359 பேர் பங்கேற்கவில்லை.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஒருங் கிணைந்த குடிமைப் பணி தேர்வு-2 நேற்று நடைபெற்றது.
அதன்படி, வேலூர் மாவட்டத்தில் வேலூர், குடி யாத்தம் என 2 மையங்களில் 77 தேர்வுக்கூடங்களில் 20,855 பேர் தேர்வு எழுத ஏற்பாடுகள் செய் யப்பட்டிருந்தன.
தேர்வு பணியில் 77 முதன்மை கண்காணிப்பாளர்கள், 9 பறக்கும் படையினர், 20 மொபைல் குழுவினர், 154 தேர்வுக்கூட அலு வலர்கள் ஈடுபட்டனர். வேலூர் கொணவட்டம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் குரூப்-2தேர்வை மாவட்ட ஆட்சியர் குமாரேவல் பாண்டியன் ஆய்வு செய்தார். தேர்வில் 3,271 பேர் பங்கேற்கவில்லை.
காவலர்களால் தாமதம்
தேர்வுக்கூடத்துக்கு தேர்வர்கள் காலை 8.30 மணி முதல் 9 மணிக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி, விருதம்பட்டு வித்யாநிகேதன் பள்ளியில் தேர்வு எழுத வந்த வர்கள் 8.40 மணி வரை அனுமதிக் கவில்லை.
இது தொடர்பாக அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்களுடன் தேர்வர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, அங்கிருந்த காவலர் ஒருவர் ‘உங்களை அனுப்பும்படி உள்ளே இருந்து உத்தரவு வரவில்லை. இதை நீங்கள் யாரிடம் வேண்டு மானாலும் போய் புகாராகக்கூட சொல்லுங்கள்’ என கூறியுள்ளார். நீண்ட வாக்குவாதத்துக்குப் பிறகு 8.50 மணியளவில் தேர்வர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப் பட்டனர்.
அதேபோல், காட்பாடி சிருஷ்டி பள்ளியில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுடன் ஏதாவது ஒரு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை எடுத்துவர வேண்டும் என்பதை சரிபார்த்துக் கொண்டிருந்தனர்.
தேர்வு எழுத வந்த மாணவிகள் சிலர் தங்களது பான் கார்டை காண்பித்தனர். அதை ஏற்க காவலர் மறுத்ததால் உள்ளே செல்ல முடியாமல் தவித்தனர். மாணவிகளின் பெற்றோர் ஆதார் அடையாள அட்டையை எடுத்து வந்து காண்பித்த பிறகே அவர்கள் உள்ளே சென்றனர்.
இந்தப் பிரச்சினையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு உரிய அறி வுரைகள் மற்றும் பயிற்சிகள் வழங்க வேண்டும் என்பது தேர் வர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. மேலும், தேர்வுகள் வரும் நேரத்தில் தேர்வுக்கூட கண்காணிப்பாளர் ஒருவர் காவலர்களுடன் இணைந்து பணியில் ஈடுபட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டத்தில் குரூப்-2 தேர்வுக்காக 2 மையங்களில் உள்ள 56 தேர்வுக்கூடங்களில் 16,309 பேர் தேர்வு எழுத ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தேர்வுக்காக 56 முதன்மை கண் காணிப்பாளர்கள், 112 அறை கண் காணிப்பாளர்கள், 14 மொபைல் குழுக்கள், 6 பறக்கும் படையினர் ஈடுபடுத்தப்பட்டனர்.
ராணிப்பேட்டை வி.ஆர்.விபள்ளி, வாலாஜா அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கல்லூரி, பனப்பாக்கம் அரசினர் மேல்நிலைப் பள்ளி, ஆட்டுப் பாக்கம் அரசினர் கல்லூரி உள்ளிட்ட தேர்வு மையங்களில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு செய்தார். மாவட்டத்தில் குரூப்-2 தேர்வில் 2,175 பேர் பங்கேற்கவில்லை.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர் மற்றும் வாணியம் பாடி என 2 மையங்களில் 52 தேர்வுக்கூடங்களில் குரூப்-2 தேர்வை 14,803 பேர் எழுத ஏற் பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆம்பூர் ஆனைகார் ஓரியண்டல் பள்ளி, மசுருல்உலும் பள்ளி, வாணி யம்பாடி மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரி, திருப்பத்தூர் கலை மற்றும் அறிவியல் கல் லூரியில் நடைபெற்ற குரூப்-2 தேர்வை மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா ஆய்வு செய்தார். தேர்வில் 1,913 பேர் பங்கேற்க வில்லை.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் குரூப்-2 தேர்வு நடைபெற்ற 185 தேர்வுக்கூடங்களில் மொத்தம் 51,967 தேர்வர்களில் 7,359 பேர் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT