Published : 20 May 2022 02:21 PM
Last Updated : 20 May 2022 02:21 PM

மூத்தக் குடிமக்களுக்கான ரயில் கட்டணச் சலுகையை மீண்டும் வழங்கிடுக: டிடிவி தினகரன்

சென்னை: "முதியோர்களுக்கான ரயில் கட்டணச் சலுகை ரத்து செய்யப்பட்டதால் கூடுதல் வருமான கிடைக்கிறது என்று நினைக்காமல், அவர்களுக்குரிய சலுகையை உடனடியாக வழங்கிட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில், "மூத்தக் குடிமக்களுக்கு ரயிலில் வழங்கப்பட்டுவந்த கட்டணச் சலுகையை மீண்டும் வழங்கிட வேண்டும்.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக 2020 மார்ச் மாதம் நிறுத்தப்பட்ட இந்தக் கட்டணச் சலுகை, இயல்பு நிலை திரும்பி மீண்டும் ரயில்கள் ஓடத் தொடங்கி மாதக் கணக்கில் ஆனபிறகும் மூத்தக் குடிமக்களுக்கு திரும்ப அளிக்கப்படாதது சரியானதல்ல.

மூத்தக் குடிமக்களை செல்வமாக கொண்டாடும் நாடுதான் நன்றி மிகுந்தவர்கள் இருக்கிற தேசமாக திகழ முடியும். முதியோர்களுக்கான கட்டணச் சலுகை ரத்து செய்யப்பட்டதால் கூடுதல் வருமான கிடைக்கிறது என்று நினைக்காமல், அவர்களுக்குரிய சலுகையை உடனடியாக வழங்கிட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x