Published : 19 May 2022 05:19 PM
Last Updated : 19 May 2022 05:19 PM
சென்னை: கனடா இலக்கியத் தோட்ட விருது பெறும் எழுத்தாளர் வேங்கடாசலபதி மற்றும் முன்னாள் நீதிபதி சந்துரு ஆகியோருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் ஆ.இரா.வேங்கடாசலபதி மற்றும் முன்னாள் நீதிபதி சந்துரு ஆகியோருக்கு கனடா இலக்கியத் தோட்டத்தின் 'இயல்'- வாழ்நாள் சாதனையாளர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இவருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
ஆய்வாளர், பேராசிரியர், பதிப்பாசிரியர், மொழிபெயர்ப்பாளர் எனப் பன்முகத் திறனாளரும்; தமிழ் - ஆங்கிலம் இரண்டிலும் தனித்த எழுத்துநடையைக் கொண்டவருமான @ARV_Chalapathy அவர்கள் கனடா இலக்கியத் தோட்டத்தின் 'இயல்'- வாழ்நாள் சாதனையாளர் விருதுக்குத் தேர்வாகியிருப்பதற்கு எனது வாழ்த்துகள்! (1/2)
— M.K.Stalin (@mkstalin) May 19, 2022
இது குறித்து அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதில், "ஆய்வாளர், பேராசிரியர், பதிப்பாசிரியர், மொழிபெயர்ப்பாளர் எனப் பன்முகத் திறனாளரும்; தமிழ் - ஆங்கிலம் இரண்டிலும் தனித்த எழுத்துநடையைக் கொண்டவருமான ஆ.இரா.வேங்கடாசலபதி கனடா இலக்கியத் தோட்டத்தின் 'இயல்'- வாழ்நாள் சாதனையாளர் விருதுக்குத் தேர்வாகியிருப்பதற்கு எனது வாழ்த்துகள்!
'நானும் நீதிபதி ஆனேன்' என்ற தன்வரலாற்று நூலுக்காக புனைவிலிப் பிரிவில் விருதுக்குத் தேர்வாகியுள்ள முன்னாள் நீதியரசர் கே.சந்துருவுக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
செந்தமிழைத் செழுந்தமிழாக்கும் படைப்புகளையும் ஆய்வுகளையும் தொடர்ந்து தருக!" என்று தெரிவித்துள்ளார்.
'நானும் நீதிபதி ஆனேன்' என்ற தன்வரலாற்று நூலுக்காக புனைவிலிப் பிரிவில் விருதுக்குத் தேர்வாகியுள்ள முன்னாள் நீதியரசர் கே. சந்துரு அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
செந்தமிழைத் செழுந்தமிழாக்கும் படைப்புகளையும் ஆய்வுகளையும் தொடர்ந்து தருக! (2/2)— M.K.Stalin (@mkstalin) May 19, 2022
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT