Published : 02 May 2016 10:53 AM
Last Updated : 02 May 2016 10:53 AM

ஆஸ்துமாவை தடுக்கும் மூச்சுப் பயிற்சிகள்

நாளை (மே 3) உலக ஆஸ்துமா தினம்

இந்திய மக்கள்தொகையில் 3 சதவீதம் பேர் ஆஸ்துமாவால் பாதிக் கப்பட்டுள்ளனர். இதற்கு மருத்துவ சிகிச்சை எடுப்பதோடு, பிராணாயா மம் போன்ற மூச்சுப்பயிற்சி மூலம் பாதுகாத்துக் கொள்ளலாம் என ஆஸ்துமா சிறப்பு மருத்துவர் தெரிவித்தார்.

ஆஸ்துமா என்பது அலர்ஜி கார ணமாக சுவாச வழியில் ஏற்படும் ஒரு ஒவ்வாமை நோய் ஆகும். அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் பாதிப்பும் இந்த நோய் அதிகரிக்க காரணமாக இருந்து வருகிறது. சமீபத்திய ஆய்வுப்படி இந்தியாவில் 100 பேரில் 3 பேருக்கு ஆஸ்துமா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் மே மாத முதல் செவ்வாய்க்கிழமை (3-ம் தேதி) உலக ஆஸ்துமா தினம் கடை பிடிக்கப்படுகிறது. ஆஸ்துமா நோய் குறித்து ஈரோட்டை சேர்ந்த ஆஸ் துமா சிறப்பு மருத்துவர் (Pulmono logist) உமாசங்கர் கூறிய தாவது:

இரவு நேரங்களில் அதிகப்படி யான இருமல், மூச்சுத்திணறல், நெஞ்சு இறுக்கம், மூச்சுவிடும் போது விசில் சத்தம் கேட்பது போன்றவை ஆஸ்துமா தாக்கத்தின் அறிகுறிகள். குழந்தைகள் மற்றும் நடுத்தர வயதினர் அதிக அளவில் இந்நோயினால் பாதிக்கப்படுவர். ஆனால், சில அலர்ஜியை உண் டாக்கக்கூடிய காரணிகள் மூலம் அனைத்து வயதினருக்கும் ஆஸ் துமா ஏற்பட வாய்ப்புள்ளது.

தொழில் நகரங்களில் பாதிப்பு

தொழிற்சாலைகள் நிறைந்த ஈரோடு, சேலம், நாமக்கல், திருப்பூர் மாவட்டங்களில் காற்று மாசுபாடு மற்றும் புகை மூட்டம் நிறைந்த இடங்களிலும் ஆஸ்துமா பற்றிய விழிப்புணர்வை அதிகப்படுத்த வேண்டும்.

மேலும் அதிக மாசுக்கள் மற்றும் வேதியியல் கழிவுகள் நிறைந்த கோழிப்பண்ணைகள், துணி பதனி டும் தொழிற்சாலை, பஞ்சு ஆலை போன்ற தொழிற்சாலைகளில் ஏற் படும் கழிவுகள் காற்றின் மூலம் பரவி நுரையீரலை பாதித்து ஆஸ்துமாவை ஏற்படுத்தும்.

இதுதவிர மரபுவழி ஆஸ்துமா என்பது வீட்டுவளர்ப்பு பிராணி களின் கழிவுகள், முடிகள், பூச்சி கள், கரப்பான், வீடுகளுக்கு அருகே உள்ள நீர்த்தேக்கங்கள், நறுமண பூக்களில் உள்ள மகரந்த துகள்கள் மூலமும் ஆஸ்துமா அலர்ஜி வர வாய்ப்புள்ளது. புகையிலை மற்றும் புகைபிடிக்கும் போதும் வெளிவரும் மாசுவினை குழந்தைகள் சுவாசிப்பதால், நுரை யீரலின் செயலாக்கம் குறைந்து ஆஸ்துமா வர வாய்ப்புள்ளது.

இந்நோயினால் நுரையீரல் பாதிப்படைந்து, மூச்சுவிடும் போது காற்று உட்செல்வதிலும் வெளிவருவதிலும் சிரமம் ஏற்படும். இந்நோயினால் பாதிக்கப்பட்ட வர்கள் வேலை செய்யும் போதும், பொது இடங்களிலும் தொடர்ந்து இருமல் ஏற்படும். இப்பாதிப்புகள் நீடித்தால் நுரையீரல் செயலிழக்க வும் வாய்ப்புள்ளது. நோய் தாக்கத்தால் மூச்சிரைப்பு மற்றும் எடை குறைவு ஏற்படும்.

மீன் மருத்துவம் பலன் தருமா?

இந்நோயை குணப்படுத்த சிலர் மீனை விழுங்குவது, அக்குபஞ்சர் போன்ற சிகிச்சை முறைகள் மேற்கொள்கின்றனர். ஆனால், இவை பலன் அளிக்கும் என்பதற்கு அறிவியல் பூர்வமாக எந்த சான்றும் கிடையாது.

ஆஸ்துமாவை தவிர்க்க மரம் நடுதல் மூலம் சுற்றுச்சுழல் மாசு பாட்டை கட்டுப்படுத்துதல், வேலை செய்யும் இடத்தில் தற்காப்பு ஆடைகள் மற்றும் தொழிற்சாலை களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு குறிப்பிட்ட கால அவகாசத்தில் உடல்நிலையை கண்காணிக்க வேண்டும்.

அலர்ஜி ஏற்பட்டவர்கள் தங்க ளுக்கு எது ஒவ்வாமையை ஏற் படுத்துகிறது என்பதை அறிந்து அதில் இருந்து காத்துக்கொள்ள வேண்டும். நோய் தாக்கத்தில் இருந்து தங்களை பாதுகாக்க தொடர்ந்து பிராணாயாமம் போன்ற மூச்சுப்பயிற்சிகளை செய்வதன் மூலம் நுரையீரலின் ஆரோக்கிய செயல்பாட்டை மேம்படுத்தலாம்.

தொடர் சிகிச்சை தேவை

இந்நோய் சரியான நேரத்தில் கண்டறியப்பட்டால் உரிய சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியும். உலக அளவில் ஆஸ்துமாவை குணப்படுத்த, ‘ஸ்டீராய்டுகள்’ பயன்படுத்தப்படுகின்றன. இதற்கு நுகர்வு முறை மருத்துவம் பாது காப்பானது. இம்மருத்துவ முறை வயதுவரம்புக்கு ஏற்ப மாறு படும்.

இந்நோயை நீண்ட காலம் கவனிக்காமல் இருந்தால், அவசர கால சிகிச்சை முறை பயனளிக் காமல் போக வாய்ப்புள்ளது. ஆகையால் தொடர் சிகிச்சை மற்றும் மருந்து முறைகளை கடைபிடிப்பது போன்றவை நோயில் இருந்து பாதுகாத்துக்கொள்ள உதவும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மருத்துவர் உமா சங்கர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x