Published : 15 May 2022 08:20 AM
Last Updated : 15 May 2022 08:20 AM

பெயர் மாற்ற தீர்மானத்தை நிறுத்தி வைக்க முதல்வர் அறிவுரை: அமைச்சர் கே.என்.நேரு

திருச்சியில் நேற்று மாநில நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, திருவாரூர் தெற்கு வீதிக்கு மறைந்த முதல்வர் கருணாநிதியின் பெயரைச் சூட்டினால், திருவாரூர் ஆட்சியர் அலுவலகம் இயங்க முடியாத வகையில் போராட்டம் நடத்தப்படும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளது தொடர்பான கேள்விக்கு, பதிலளித்த அமைச்சர் கே.என்.நேரு “என்ன செய்வார்கள்?. கை, கால்களைக் கட்டிவிடுவார்களா?. திருவாரூர் நகர்மன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட பெயர் மாற்ற தீர்மானத்தை நிறுத்தி வைக்குமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறிவிட்டார். இன்றும் பழைய பெயரில்தான் அந்த வீதி உள்ளது. ஏதாவது காரணம் கிடைக்காதா என்று பாஜகவினர் அலைகின்றனர். எந்தத் தனிநபரும் அரசை, அரசுப் பணியை, அரசு அலுவலர்கள் பணி செய்வதை நிறுத்த முடியுமா? அப்படி செய்தால் அதற்குரிய வழக்குகளை அவர்கள் சந்திக்க நேரிடும்” என தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT   ( 4 Comments )
  • அழ.வள்ளியப்பன்.

    இயங்க முடியாத வகையில் போராட்டம் நடத்தப்படும் என்று சவால் விட்டவர் மேல் நடவடிக்கை எடுக்காமல், பெயர் மாற்ற தீர்மானத்தை ஏன் நிறுத்தி வைக்க வேண்டும்? அண்ணாமலை போராடுவேன் என்று சொன்னால் அனைத்தையும் நிறுத்தி வைத்து விடுவார்களா?

  • அழ.வள்ளியப்பன்.

    பாதை மாறுகிறதா தமிழக அரசு? முடிவு எடுப்பதும் பின் ரத்து செய்வதும், நிறுத்தி வைப்பதுமான குழப்பம் அவப்பெயரை உண்டாக்கும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். எண்ணி துணிக கருமம், துணிந்தபின் எண்ணுவம் எனபது இழுக்கு .

 
x
News Hub
Icon