Published : 01 Jun 2014 12:04 PM
Last Updated : 01 Jun 2014 12:04 PM
தமிழகத்தில் கர்ப்பப்பை புற்று நோய் தொடர்பாக 50 லட்சம் பெண் களுக்கும், மார்பக புற்று நோய் தொடர்பாக, 64 லட்சம் பெண்களுக்கும் அரசு மருத்துவ மனைகளில் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என, மாநில சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில், உலக புகையிலை ஒழிப்பு தினம் மற்றும் உலக புற்று நோயில் பிழைத்தவர்கள் தினம் சனிக்கிழமையன்று கொண்டாடப் பட்டது. நிகழ்ச்சிக்கு இரைப்பை குடல் அறுவை சிகிச்சைத் துறை தலைவர் டாக்டர் சந்திரமோகன் தலைமை வகித்தார். மாநில சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
‘புகை தவிர்த்து புற்றுநோயின்றி வாழ்க்கையை கொண்டாடுவோம்’ என்ற தலைப்பில் நடந்த இந்நிகழ்ச்சியில், புகையிலையின் பாதிப்புகள் குறித்து, பொதுமக்கள் மற்றும் மருத்துவர்களின் கலந்து ரையாடல் நடைபெற்றது. மேலும், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மீண்டவர்கள் தங்கள் அனுபவங் களைப் பற்றி பேசினர்.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியதாவது:
உலக புற்றுநோயால் பிழைத்த வர்கள் தினம் ஆண்டுதோறும் ஜூன் மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகின்றது. புற்றுநோயால் வாடும் நோயாளி களுக்கு நம்பிக்கையை ஏற்படுத் தவே இந்த தினம் அனுசரிக் கப்படுகிறது. புற்றுநோயால் உலகம் முழுவதிலும் 82 லட்சம் பேர் இறக்கிறார்கள். இன்னும் 20 வருடங்களில் புற்று நோயாளிகளின் எண்ணிக்கை 1.4 கோடியில் இருந்து 2.2 கோடியாக உயர வாய்ப்புள்ளது. அதிகமான இறப்புகள் இரைப்பை, பெருங்குடல், நுரையீரல் மற்றும் மார்பக புற்றுநோய் ஆகியவற்றால் உண்டாகின்றன.
உலக சுகாதார நிலைய ஆய்வுப்படி, உலகளவில் 80 லட்சம் பேர் புகையிலையை உபயோகப் படுத்துவதால் உயிரிழக்கின்றனர். அடுத்த 15 வருடங்களில் இது உலகளவில் 80 லட்சமாக அதிகரிக்கக் கூடும். புகைபிடிக்கும் பழக்கம் புகை பிடிப்பவரை மட்டுமின்றி, அருகில் உள்ளவர் களையும் பாதிக்கின்றது.
சென்னையில் எடுக்கப்பட்ட ஆராய்ச்சிகளின்படி, ஆண் களுக்கு வரும் புற்று நோய்களில் 40 முதல் 45 சதவீதம் வரை புகையிலை பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படுகின்றன. ஒரு மனிதன் பிடிக்கும் ஒவ்வொரு சிகரெட்டிற்கும், அவன் தன் வாழ் நாளில் 11 நிமிடங்களை இழக்கிறான் என ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.
தமிழகத்தில் அரசு மருத்துவ மனைகளில் நுரையீரல் புற்றுநோய் உள்ளிட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. கர்ப்பப்பை புற்றுநோய் தொடர்பாக, 50 லட்சம் பெண்களுக்கும், மார்பக புற்றுநோய் தொடர்பாக, 64 லட்சம் பெண்களுக்கும் அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில், ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையின் தலைவர் டாக்டர் விமலா, மருத்துவ கல்வி இயக்குநர் டாக்டர் கீதா லஷ்மி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT