Published : 14 May 2022 04:00 AM
Last Updated : 14 May 2022 04:00 AM

ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை: கடலூர் எம்எல்ஏ கோ.ஐயப்பன் வழங்கினார்

கடலூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட ஏழை மாணவ-மாணவி களுக்கு கல்வி உதவித் தொகையை எம்எல்ஏ கோ.ஐயப்பன் வழங்கினார்.

விருத்தாசலம்

கடலூர் சட்டப்பேரவை உறுப்பினர் கோ.ஐயப்பன், தனது தொகுதியைச் சேர்ந்த ஏழை-எளிய மாணவ, மாணவிகள் 5 பேருக்கு ரூ.2.5 லட்சம் மதிப்பிலான கல்வி உதவி தொகைக்கான காசோலைகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் நிலவள வங்கி தலைவர் ராமலிங்கம், ஊராட்சி மன்ற தலைவர்கள் காரணப்பட்டு பிரகாஷ், உள்ளேரிப்பட்டு பாண்டியன், புதுக்கடை கனகராஜ், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ஜோதி, எல்ஐசி வேணு, மாநகராட்சி 3-வது வார்டு சதீஷ், செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

டாக்டர் பிரவீன் ஐயப்பன் நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை செய்திருந்தார். இந்நிகழ்ச்சிக்கு ரோட்டரி கிளப் ஆப் டிவைன் சிட்டி தலைவர் வெங்கட்ராம் முன்னிலை வகித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x